"புதுக்குடியிருப்பில் பிரபாகரன் பதுங்கும் ஓர் இடத்தில் இலங்கை விமானப்படை குண்டுவீச்சு"
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலப்பிள்ளை பிரபாகரன் அடிக்கடி வந்து செல்லும் முக்கிய மறைவிடம் ஒன்றின் மீது விமான குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.
இரணைமடு குளத்திற்கு வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் விடுதலைப் புலிகளின் ஒன்று கூடும் இலக்குகள் மீது வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை,வன்னியில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்கள் மீது நடத்தப்படுகின்ற எறிகணை மற்றும் விமானக்குண்டுத் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்கள் காரணமாக தர்மபுரம் வடக்கு, புளியம்பொக்கணை, வட்டக்கச்சி, கல்மடு பகுதிகளில் இருந்து மக்கள் கடந்த இரண்டு தினங்களாகப் பாதகாப்பான இடங்களை நாடி இடம்பெயர்ந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எறிகணை தாக்குதல்களில் 140க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகக் கூறப்படுகின்றது.
இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் புகுவதற்கு இடமின்றி வீதியோரங்களில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
BBC Tamil
0 விமர்சனங்கள்:
Post a Comment