ஈழத் தமிழருக்காக திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதப் போர்! - இன்று முதல் சென்னையில்
வன்னியில் உடனடியாக போரை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்திய மத்திய அரசும் தமிழக மாநில அரசும் உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழக அரசின் விருந்தினர் விடுதிக்கு முன்பாக - எம். ஏ. சிதம்பரம் ஸ்ரேடியத்துக்கு வெளியே - அமைக்கப்படுகின்ற உண்ணாவிரத மேடையில் இன்று காலை 9.00 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கிறார் திருமாவளவன்.
‘ இனவெறிப் போரை நிறுத்து!’, ‘அமைதிப் பேச்சை நடத்து!!’ ஆகிய இரு கோரிக்கைகளையும் இந்திய மத்திய அரசிடம் முன்வைத்து - அதற்கு தமிழக அரசும் உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி - இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை திருமாவளவன் நடத்துகிறார் என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அறிவித்தது.
தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரான திருமாவளவன் ஈழத் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாகக் குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களில் திருமாவளவனும் அவரது கட்சியினரும் நேற்றுமாலை ஈடுபட்டிருந்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment