தமிழீழப் போராட்டம் முல்லைத்தீவைப் படையினர் கைப்பற்றுவதுடன் நின்றுவிடாது:ஜெனரல் அசோக் மேதா
முல்லைத்தீவை கைப்பற்றினால் யுத்தம் நிறைவுற்றதென இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாதென இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
“பிரபாகரனின் தமிழீழப் போராட்டம் முல்லைத்தீவைப் படையினர் கைப்பற்றுவதுடன் நின்றுவிடாது” என 1987ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த இந்திய அமைதிப் படையில் அங்கம்வகித்தவர்களில் ஒருவரான ஜெனரல் அசோக் மேதா தெரிவித்தார்.
இலங்கை விவகாரங்கள் தொடர்பாக அல்-ஜெசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
விடுதலைப் புலிகளின் வசமிருக்கும் முல்லைத்தீவும் படையினரால் கைப்பற்றப்பட்டால், விடுதலைப் புலிகள் நாட்டின் ஆங்காங்கே சிறிய குழுக்களாக மீளக் குழுநிலைப்படுத்தக்கூடும் எனவும் தகவல் வெளியிட்டார்.
எனவே முல்லைத்தீவை இலங்கை அரசாங்கம் கைப்பற்றுமிடத்து, யுத்தம் நிறைவுற்றதென உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாதெனவும் அவர் கூறினார்.
எந்தவொரு பயங்கரவாத அமைப்பின் தலைவரும் களத்தில் போரிடுவதில்லையென கருத்து வெளியிட்ட அவர், விடுதலைப் புலிகளின் தலைவர் மலேசியாவிலோ அல்லது தென் இந்தியாவிலும் கூட தனது தமிழீழ போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் ஜெனரல் அசோக் மேதா அந்தச் செவ்வியில் மேலும் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment