பிரபாகரனின் கொடும்பாவி எரிப்பு
இன்று அம்பாறை மாவட்ட பொதுமக்களால் புலிகளின் வன்செயல்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வார்ப்பாட்டத்தில் திருக்கோவில், தம்பிலுவில், பொத்துவில் பிரதேசங்களைச் சேர்ந்த 1000 இற்கும் மேற்பட்டு பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் வன்னியில் புலிகள் மனித கேடயங்களாக தடுத்து வைத்துள்ள பொது மக்களை தமது விருப்பிற்கேற்றவாறு தாம் விரும்பிய பிரதேசங்களை நோக்கிச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் அங்குள்ள மக்களை பலாத்காரமாக யுத்தத்தில் ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும் எனவும் கோசங்களைக் எழுப்பினர். முடிவில் அங்கு கூடியிருந்த மக்கள் சீருடையணிந்த பிரபாகரனது கொடும்பாவிக்கு எரியூட்டினர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment