தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரையிலான இலங்கை இப்பொழுது ஒன்றாகி விட்டது -அமைச்ச்ர் மைத்திரிபால சிறிசேன
கிளிநொச்சியைக் கைப்பற்றியதன் மூலம் பல உயிர்களை பலகொண்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆட்சியை புல்டோசரைக் கொண்டு தகர்த்து தென்னிலங்கை தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரையிலான இலங்கை இப்பொழுது ஒன்றாகி விட்டதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரும் விவசாய கமத்தொழில் சேவை அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்த புலிகளின் பலத்தை படையினர் உடைத்தெறிந்து விட்டனர். இதன்மூலம் தெய்வேந்திரமுனையும் பருத்தித்துறையும் இப்பொழுது இணைக்கப்பட்டு விட்டது. ஜே.ஆர். ஜயவர்த்தனவின் யுகத்தில் பிரபாகரனின் ஆட்சிப்பலம் கிளிநொச்சியில் இருந்துவந்தது. பிரேமதாச, விஜேதுங்க ஆகியோரின் காலப்பகுதியிலும் பிரபாகரனின் ஆட்சி கிளிநொச்சியில் இருந்துவந்தது. சந்திரிகாவின் யுகத்திலும் பிரபாகரனின் ஆட்சி நிலைத்தது. ஆனாலும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியின் காலத்தில் பிளவுபட்ட நாடு ஒன்றாகிவிட்டது. இந்நாட்டில் இரு அரசு இருக்க இயலாதென்பதை அன்று எடுத்துக்கூறிய ஜனாதிபதியின் வார்த்தை யதார்த்த நிலைக்கு உள்ளாகிவிட்டது. என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment