விடுதலைப் புலிகள் தலைவரை ஒப்படைக்க வேண்டும் - காங்கிரஸ் கட்சி கோரிக்கை
இலங்கையின் வடக்கே நடந்து வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு பிடிப்பட்டால் அவரை இலங்கை அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பேசவல்ல வீரப்ப மொய்லி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை எதிர்கொள்ள அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதே நேரம் கிளிநொச்சி நகரம் இலங்கை இராணுவத்தின் வசம் வந்துள்ளது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் எவ்வித கருத்தினையும் வெளியிடவில்லை.
கொழும்பில் குண்டுவெடிப்பு
கொழும்பின் நகரப்பகுதியில் பிரதானப் பகுதியில் சனிக்கிழமையன்று குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இருவர் காயமடைந்து, கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக இலங்கை காவல்துறை சார்பில் பேசவல்லவரான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
லண்டனில் புத்த கோவில் மீது தாக்குதல்
சனிக்கிழமை அதிகாலையன்று லண்டனின் கிங்கிஸ்பரியில் அமைந்துள்ள இலங்கை புத்த கோவில் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. கோவிலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
BBC Tamil
0 விமர்சனங்கள்:
Post a Comment