நேருக்கு நேர் நின்று தமது பலத்தை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் பிரபாகரனுக்கு டளஸ் சவால்:
தமிழீழ விடுதலைப் புலிகளை முல்லைத்தீவுக்குள் ஒதுக்கியுள்ள படையினர் அங்கு நாற்புறங்களையும் சுற்றிவளைத்து நிலை கொண்டுள்ளனர். இத் தருணத்தில் உயிருக்குப் பயந்து ஓடுவதற்கு முயற்சிக்காது களத்தில் நேருக்கு நேர் நின்று தமது பலத்தை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குச் சவால் விடுத்துள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்தார்.
தமது படையினர் மிகவும் சக்திமிக்கவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது முல்லைத்தீவு என்ற பகுதிக்குள் ஒடுக்கப்பட்டுள்ளனர். இதனால், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று பலம் இழந்தவராகக் காணப்படுவதுடன் உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடவே முயற்சிக்கின்றார்.
எமது படையினர் முல்லைத்தீவைச் சுற்றி நாற்புறமும் நிலைகொண்டுள்ளனர். முடியுமானால் அல்லது பிரபாகரனுக்கு சக்தியிருந்தால் எமது பலம் பொருந்திய படையினருடன் களத்தில் நேருக்கு நேர் நின்று போரிட முடியுமா எனச் சவால் விடுக்கிறேன்.
அப்படிப் பிரபாகரனுக்குப் பலம் இருப்பதாக நிரூபிக்க வேண்டுமானால் நேருக்கு நேர் மோத வேண்டும் என்ற சவாலையும் அவருக்கு விடுப்பதாக அவர் தெரிவித்தார். இது அவரால் முடியாது. அப்பாவித் தமிழ் மக்களையும், பெற்றோரையும் சிறைப்படுத்தி வதைத்துக் கொண்டிருக்கும் புலிகளை அழித்தொழிக்கும் காலம் இன்னும் வெகு தொலைவிலில்லை.
ஓடிக்கொண்டிருக்கும் பிரபாகரனின் கடைசி நிமிடங்களை மேலும் சில விநாடிகளுக்கு தக்கவைப்பதற்கோ அல்லது நீடிப்பதற்கோ தேசிய சர்வதேசிய சக்திகளால் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை அனைத்தும் முறியடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியார் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரபாகரன் நாட்டைவிட்டு செல்லக்; கூடும் - அரசாங்கம்:
இலங்கை இராணுவப் படையினரின் வெற்றிகரமான முன்நகர்வுகளை எதிர்நோக்க முடியாது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாட்டைவிட்டு தப்பியோடக் கூடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு காட்டுப் பகுதிகளில் படையினர் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தியுள்ளதன் மூலம், நாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் கட்டத்தை எட்டியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அலப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான விடுதலைப் புலி தலைவர்கள் தப்பியோடவோ அல்லது சரணடையவோ உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 2009ம் ஆண்டு சுதந்திர தினம் வராற்று சிறப்பு மிக்க ஓர் சுதந்திர தினமாக அமையப் பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
யுத்தம் தொடர்பாக ஊடகங்கள் மக்களை விழிப்படையச் செய்துள்ளதாகவும், இந்த சேவை பராட்டுக்குரியதெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Global Tamil News
0 விமர்சனங்கள்:
Post a Comment