ஆங்கிலம் தேவை தான்; ஆனால் அவசரம் கூடாது
க.பொ.த உயர்தர வகுப்பில் அனுமதி பெறுவதற்குச் சாதாரண தரப் பரீட்சை யில் ஆங்கில பாடச் சித்தி யைக் கட்டாயமாக்கும் சுற்றுநிருபமொ ன்றைக் கல்வித் திணைக்களம் வெளியிட் டிருக்கின்றது. இதன்படி க.பொ.த சாதா ரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் சித் தியடைபவர்கள் மாத்திரம் உயர்தர வகு ப்பில் கல்வியைத் தொடர முடியும்.
ஆங்கில அறிவு இன்றைய நிலையில் அத்தியாவசியமானது. இன்றைய தொழி ல்நுட்ப வளர்ச்சியுடன் ஈடுகொடுத்துச் செல்வதற்கும் உலக விவகாரங்களை உட னுக்குடன் அறிந்துகொள்வதற்கும் ஆங்கி லம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வர். அரசாங்கம் ஆங்கிலக் கல்விக்கு முக்கியத் துவம் அளிக்கின்றது. ஜனவரி முதலாந் திகதியை ஆங்கிலக் கல்வி வளர்ச்சிக் கான தினமாக ஜனாதிபதி பிரகடனப் படுத்தியிருக்கின்றார்.
எனினும், இந்த நேரத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு ஆங்கிலத் தைக் கட்டாய பாடமாக்குவது புத்திசா லித் தனமானதல்ல. மாணவ சமூகம் அதற்கான தயார் நிலையில் இப்போது இல்லை. சுயபாஷைக் கோஷம் வலு வாக எழுந்த காலப்பகுதியில் ஆங்கில த்தை அறவே கைவிட்டதால் இன்றைய மாணவ சமூகம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை நாம் ஏற்றுக்கொண் டாக வேண்டும்.
சுயபாஷைக் கல்வி நடைமுறைக்கு வருவதற்கு முன் ஆங்கில மொழி மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட் டன. சுயபாஷைக் கல்வி நடைமுறைக்கு வந்தவுடன் ஆங்கிலம் பரீட்சையில் சித்தி யடைவதற்குத் தேவையற்ற பாடமாகி யது.
பெரும்பாலான மாணவர்கள் ஆங் கிலம் படிப்பதை அறவே கைவிட்டனர். ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை அம் மாணவர்களுக்கு உணர்த்தி அவர்கள் ஆங் கிலம் கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் செயற்பாடுகள் எதுவும் அக் காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை. ஆசிரியர்களும் அக்கறை செலுத்தவி ல்லை.
பெற்றோரும் அக்கறை செலுத்த வில்லை. இதன் விளைவாக ஆங்கிலக் கல்வி குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு அறவே கைவிடப்பட்டது.
இன்று நகர்ப்புற மாணவர்கள் ஆங்கி லம் கற்பதில் அக்கறை செலுத்துகின்ற னர். அதற்கான வசதி வாய்ப்புகளும் நக ரங்களில் உண்டு. ஆனால் கிராமப்புற மாண வர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை.
இதனால், ஆங்கில அறிவைப் பொறுத்த வரையில் நகர்ப்புற மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்குமிடையே பாரிய இடைவெளியொன்று காணப்படு கின்றது. இந்த நிலையில், க. பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கு ஆங்கிலத் தைக் கட்டாய பாடமாக்குவது கிராமப் புற மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக இருக்கும்.
ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கு வது தவறு எனக் கூறவில்லை. இந்த நேரத்தில் கட்டாய பாடமாக்குவது தான் தவறு. கிராமப்புற மாணவர்கள் ஆங்கி லத்தில் போதுமான அறிவைப் பெற்றுள் ளார்களெனக் கூறமுடியாது. மற்றைய பாட ங்களில் ஆகக் கூடுதலான புள்ளிகளைப் பெற்றாலும் ஆங்கிலத்தில் சித்தியடையா விட்டால் உயர் கல்வி வாய்ப்பு அவர்க ளுக்கு மறுக்கப்படும். இது நியாயமான தல்ல.
ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கும் சுற்று நிருபத்தை உடனடியாக மீளப் பெறு வதுடன் கிராமப்புற மாணவர்களின் ஆங் கில அறிவு மட்டத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண் டும். ஆங்கில அறிவைப் பொறுத்த வரை யில் நகர்ப்புற மாணவர்களுக்கும் கிரா மப்புற மாணவர்களுக்குமிடையே இடை வெளி இல்லாத நிலையை முதலில் தோற் றுவிக்க வேண்டும். அதன் பின், ஆங்கி லத்தைக் கட்டாய பாடமாக்குவது பற்றி ஆலோசிக்கலாம்.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment