வன்னியில் நேற்றும் பீரங்கித் தாக்குதல் 48 பொதுமக்கள் பலி; 174 பேர் காயம்
வன்னியில் நேற்றுப் பரவலாக நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 174 பேர் காயமடைந்துள்ளனர் எனத் இணையத்தளங்கள் செய்தி வெளியிட் டுள்ளன.
இதுகுறித்து மேலும் அவற்றில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு முல்லைத்தீவு மாத்தளான் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் நடத்தப்பட்ட ஆட்லெறி பீரங்கித் தாக்குதலில் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் சிறுவர்களான சகோதரர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, தேவிபுரம் ஆற்றங்கரைப் பகுதியில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்களின் குடிசைகள் மீது நேற்று நடத்தப்பட்ட ஆட்லெறி ஷெல் மற்றும் பல்குழல் தாக்குதல்களில் 2 பேர் பலியானதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு சுதந்திரபுரம் வீட்டுத்திட்டம் மீது நேற்று பிற்பகல் 4.35 மணியளவில் நடத்தப்பட்ட ஆட்லெறி மற்றும் பல்குழல் மற்றும் பீரங்கித் தாக்குதலில் 6 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதி மீது நேற்று நடத்தப்பட்ட ஆட்லெறி மற்றும் பல்குழல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதி மீது நேற்று நடத்தப்பட்ட ஆட்லெறி, பல்குழல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 14 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மூங்கிலாறு, உடையார், வள்ளிபுனம் ஆகிய மூன்று இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் மட்டும் மொத்தமாக 64 பேர் காயமடைந்துள்ளனர் என்றுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment