61வது சுதந்திர தினம் இன்று ஜனாதிபதி தலைமையில் காலிமுகத்திடலில் கோலாகல வைபவம்
இலங்கையின் 61வது சுதந்திர தினம் இன்றாகும். இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.பிரதான நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை கொழும்பு காலி முகத் திடலில் நடைபெறுகின்றது.இதனை முன்னிட்டு கொழும்பு நகரெங்கும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மாத காலம் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்ப டுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
சுதந்திர தினத்தை யொட்டிய நிகழ்வுகளுக்கும், தேசத்திற்கு மகுடம் கண் காட்சிக்குமாக பத்தாயிரம் பொலிஸாரும் முப்படையி னரும் கடமையில் அமர்த்த ப்பட்டுள்ளனர்.
கொழும்பு நகரில் போக் குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயர் பாது காப்பு வலயமாக அறிவிக் கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட சோதனை நட வடிக்கைகளும் மேற்கொள் ளப்படுகின்றன. இதற்கென புலனாய்வுத் துறையினரும், சிவில் பாதுகாப்புப் பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு காலி முகத் திடலில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் சுதந்திர தின பிரதான நிகழ் வுக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜ பக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, சபாநாய கர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார, பிரதம நீதியரசர் சரத் என்.
சில்வா, பொதுநிர்வாக உள்நாட்டலுவ ல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, மேல் மாகாண ஆளுநர் மற்றும் அமைச்ச ர்கள், பிரதி அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரி கள், விசேட அதிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பாதுகாப்புப் படை சார்பில், பிரதம பாதுகாப்பு அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பாதுகாப்பு படையினரின் வெற்றியைப் பாராட்டும் வகையிலும் அவர்களது சாகஸங்களை வெளிப்படுத்தும் வகையிலும் முப்படை மற்றும் பொலிஸாரின் அணி வகுப்புகள் இடம்பெறுகி ன்றன. இதற்கென ஐந்து நாட்கள் படையினர் ஒத்திகை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தவிரவும், பாடசாலை மாணவ, மாணவி களின் நிகழ்வுகள் இடம்பெறுவதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலந்து கொள்ளும் கலைஞர்களின் நிகழ்வுகளும் சுதந்திர தினக் கொண்டாட்ட பிரதான வைபவத்தை அலங்கரிக்கின்றன. முப்படையினரின் மரியாதை அணி வகுப்பிலும் சாகசத்திலும் அதிகாரிகளும் படை யினருமாக 6253 பேர் பங்கேற்கின்றனர்.
கடற்படையினரின் சாகசகம்
கடற்படை மரியாதை அணி வகுப்பிலும், சாகச த்திலும் 626 பேர் பங்கேற்கின்றனர். இதில் புலிகள் மீது தாக்குதல் நடத்திய சபுரா, சமுத்ரா, சுரனிமல, சாகர ஆகிய நான்கு கப்பல்கள், டோராப் படகுகள், அதிவேகத் தாக்குதல் படகுகள் என்பன சாக சத்தில் ஈடுபடுகின்றன.
விமானப் படையினரின் சாகசம்
விமானப் படையில் 25 அதிகாரிகளும், 475 படையினரும் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். பெல் 41, எம். ஐ. 17, எம். ஐ. 24, வை௧2, கே௮, எப்௭, கிபீர், மிக் - 27 ஆகியவற்றின் தலா மூன்று விமானங்களும், ஏ. என். 32 ரக விமான மொன்றும், சீ. ஐ. 30 ரக இரண்டு விமானங்கள் என்பனவும் சாகசத்தில் ஈடுபடுகின்றன.
இராணுவ அணிவகுப்பு
இராணுவத்தின் சார்பில் 5130 பேர் அணி வகு ப்பில் பங்கேற்கின்றனர். சமிக்ஞை பிரிவு, பல்குழல் பீரங்கிப் படை, ராடர் பிரிவு, கரையோரக் காவற் பிரிவு, இராணுவ பொலிஸ் பிரிவு, ரொக்கட் லோஞ்சர் பிரிவு மற்றும் கவச வாகனங்கள், தாங்கிகள் என்பன அணி வகுப்பில் பங்கேற்கின்றன.
இதேவேளை, கொழும்பு - பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகும் ‘தயட்ட கிருள’ தேசத்திற்கு மகுடம் கண்காட்சி, எதிர்வரும் எட்டாந் திகதி வரை நடைபெறும். இதில் படையினரின் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான விடயங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment