கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லை: இலங்கை அரசு
இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுடனான மோதல்களில் தாம் கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்தவில்லை என்று இலங்கை அரசு கூறும் உறுதியை தாம் ஏற்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
முன்னதாக, கடந்த 18 மணிநேர எறிகணைத் தாக்குதல்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கின்ற கடைசி முக்கிய மருத்துவமனையும் கொத்தணிக்குண்டுகளால் தாக்கப்பட்டதாக ஐ. நா பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்த கொத்தணிக்குண்டுகளை யார் ஏவினார்கள் என்று தெரியவில்லை என்றும், அந்த மருத்துவமனை தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தது 52 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
மேலும் 80 பேர் அதில் காயமடைந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பிலான பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இன்னும் சில நாட்களில் விடுதலைப்புலிகள் வெற்றிகொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment