இது இறுதிப் போரா?
சில நாள்களுக்கு முன்பு முக்கியமான ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர் விடுத லைப் புலிகள். ""நிரந்தரப் போர்நிறுத்தமும் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தையுமே இனப் பிரச்னைக்குத் தீர்வுகாண உதவும்'' என்று அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் பி. நடேசன் கூறியிருப்பது இலங்கை இனப் பிரச்னையில் ஒரு புதிய ஒளிக்கீற்றைத் தோற்றுவித்திருக்கிறது
இந்த அறிவிப்பு காலம் கடந்த ஞானோத யம் என்றாலும் அலட்சியப்படுத்திவிட முடி யாதது என்றே தோன்றுகிறது. அந்த இயக்கத் தில் முதல்முறையாக அமைதிப் பேச்சுக் கென்று பிரத்யேகமாக சர்வதேச உறவுகள் துறை தோற்றுவிக்கப்பட்டிருப்பதும் அதற் கென தனிப் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டி ருப்பதும் இந்த நம்பிக்கைக்கு வலுவூட்டுகின் றன
இதற்கு முன் இலங்கை அரசுக்கும் விடுத லைப் புலிகளுக்கும் இடையே பல முறை போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. எனினும், இரு தரப்பினருமே பேச்சுவார்த்தை காலகட் டத்தை மற்றொரு பெரிய அளவிலான போருக்குத் தயாராகும் அவகாசமாக பயன்ப டுத்திக்கொண்டனர் என்பதே வரலாறு
ஆனால், இப்போதைய காலகட்டத்தை முன் னர் உள்ள சூழலுடன் ஒப்பிட முடியாது
உலகின் 40 நாடுகளின் தடை, சர்வதேசப் புறக்கணிப்பு, அமைப்பு ரீதியிலான பலவீ னம், போர்ப் பின்னடைவுகள் என்று விடுத லைப் புலிகள் கடும் நெருக்கடியில் இருக்கின் றனர். மேலும், உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு கோஷம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், இனிவரும் காலங்களில் எந்த வொரு ஆயுதக் குழுவுக்கும் சர்வதேச உதவி கிடைக்காது என்பதை புலிகளும் உணர்ந்தி ருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது
இலங்கை அதிபர் ராஜபக்ஷ, ""இந்த இறு திப் போர் இன்னும் சில வாரங்களில் முடி வுக்கு வரும்; விடுதலைப் புலிகள் முற்றிலு மாக அழிக்கப்பட்டுவிடுவார்கள்'' என்று மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்துவந்தா லும் அது சர்வதேச அளவிலான எதிர்ப்பைத் தணிக்கும் யுத்த தந்திரமே தவிர வேறில்லை
உண்மையில் போர் அதன் அடுத்த பரிமா ணத்தை நோக்கிச் செல்கிறது என்பது அந் நாட்டு அரசுக்கு நன்றாகவே தெரியும்
இன்னும் சொல்லப் போனால், இந்தப் போரின் இலக்கும்கூட ஒரு தனி அரசாங்கம் போல் செயல்படும் விடுதலைப் புலிகளைக் காடுகளை நோக்கித் தள்ளுவதேயாகும்
இதன் மூலம் மரபுவழிப் போர்முறையிலி ருந்து அவர்களை வெளியேற்றி "கொரில்லா' முறைக்குத் தள்ளி, உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் அந்த அமைப் பின் செயல்பாடுகளை முடக்கிவிடலாம் என்று அரசு திட்டமிடுகிறது
இதற்கிடையே, போரின் உக்கிரத்தில் தமி ழர்களை அவர்களுடைய வாழ்விடங்களிலி ருந்து வெளியேறச் செய்வதன் மூலம் தமிழர் கள் பெரும்பான்மையினராக வசிக்கும் பகுதி என்று எதுவும் இல்லாமல் போகும்; அதன் மூலம் தனி ஈழம் என்ற கோஷத்துக்கும் முடிவு வரும் என்றும் இலங்கை அரசு நம்புகி றது
ஆனால், நெருக்கடியான சூழல்களில் தம் வசமுள்ள நிலப்பரப்பிலிருந்து வெளியேறுவ தும் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அரசுத் தரப்பினர் நிலைகொண்ட பின்னர், திடீர் தாக்குதல்கள் மூலம் பெரும் சேதத்தை உரு வாக்குவதுமே விடுதலைப் புலிகளின் கடந்த காலச் செயல்பாடாக இருந்திருக்கிறது
எனினும், இந்த முறை விடுதலைப் புலிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் அர சின் திட்டங்கள் சாத்தியமாகும் வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், அதற்கு நிறைய காலம் ஆகும் என்பதும் அதுவரை நிகழும் தாக்குதல் கள் மிக மோசமான பாதிப்புகளை உருவாக் கும் என்பதுமே உண்மை நிலையாகும். அதா வது, பயங்கர செயல்களில் ஈடுபடும் ஓர் இயக் கம் முழுமையான பயங்கரவாத இயக்கமா கும் அபாயமும் அதனால் ஏற்படும் விளைவுக ளுமே இந்தப் போரின் பின்விளைவுகளாக இருக்கும்
இதில், கவனம்கொள்ளத் தக்க இன் னொரு விஷயம் என்னவென்றால், அரசுப் படையினரின் வெற்றியைத் தமிழர்கள் அரசியல் ரீதியிலான தீர்வை எட் டுவதற்கான சாதகமான அம்சமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதாகும்
ஏனெனில், விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை தம்வசம் திருப்பி அவர்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்கிற இப்போ தைய நிர்ப்பந்த சூழலிலும்கூட, ஆயிரக் கணக்கானோரைக் கொன்றழிக்க அந்த அர சாங்கம் தயங்கவில்லை. போர்ச்சூழலற்ற பகு திகளில் வசிக்கும் தமிழர்களும்கூட ஒவ் வொரு நாளும் சட்ட விரோத நடவடிக்கை களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது
விசாரணை என்ற பெயரில் ஏராளமான தமிழ் இளைஞர்கள் ராணுவத்தால் கடத்தப்ப டுவதாக சிங்களப் பத்திரிகைகளே எழுதுகின் றன
ஜனநாயக மரபுகளில் அந்நாட்டு அரசுக் குத் துளியும் நம்பிக்கை இருப்பதாகத் தெரிய வில்லை. ""போரால் பாதிக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர்களைச் சந்திக்க அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது'' என்று ஐ.நா. சபைக்கும் சர்வதேச நாடுகளுக் கும் கடிதம் எழுதியிருக்கிறார் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரணில்
அரசின் கொடுங்கோன்மையை எழுதும் சிங்களப் பத்திரிகையாளர்களும்கூட கடும் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். ராஜபக்ஷ பதவியேற்றதிலிருந்து, ""இதுவரை 9 பத்திரி கையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்; 27 பேர் தாக்கப்பட்டிருக்கின்றனர்'' என்று அந்நாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்த னவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கி றார். "சண்டே லீடர்' ஆசிரியர் லசந்த விக்கிர மதுங்க கொலை; "ரிவிரா' ஆசிரியர் உபாலி தென்னகோன் தம்பதி மீதான தாக்குதலைத் தொடர்ந்து சுனந்த தேஸ்பிரியா, சனத் பால சூர்ய, போதல ஜயந்த உள்ளிட்ட பத்திரிகை யாளர்கள் உயிருக்கு அஞ்சி இந்தியாவுக்குத் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்
பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்ஷ, ""அரசுக்கு எதிராக எழுதினாலோ, பேசினாலோ நாட்டைவிட்டு வெளியேற்று வோம்'' என்று சர்வதேச ஊடகங்களுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார். "பிபிசி' நிருபர் நேரடியாகவே மிரட்டப்பட்டிருக்கி றார்
அரசின் வார்த்தைகளில் நேர்மை இல்லை
போர்ப் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளி யேறுவதற்காக அரசு தானாக அறிவித்த 48 மணி நேர அவகாசத்திலும்கூட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக் கின்றனர். ஆனால், ராஜபக்ஷ தேர்தல் பிரசா ரக் கூட்டங்களில் யுத்த பலிகளை தன்னு டைய வெற்றியாக, தேசிய வெறியாக உருமாற் றிக் கொண்டிருக்கிறார். ஆகையால், விடுத லைப் புலிகளின் வீழ்ச்சி தமிழர்கள் நிலையை மேலும் மோசமாக்கவே செய்யும்
அதே சமயம், விடுதலைப் புலிகளே இறுதி மீட்பர்கள் என்றோ, பிரபாகரன் புனிதர் என்றோ, தமிழீழமே தீர்வு என்றோ கூறிவிட முடியாது. தங்கள் எதிர்காலம் என்ன என் பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும்; அதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட வேண் டும் என்பதுதான் நியாயமான தீர்வாக இருக்க முடியும். இப்பிரச்னையை நேர்மை யாக அணுகுவதற்கான வழிமுறையும்கூட இதுவே
அதிபர் ராஜபக்ஷ அடிக்கடி வர்ணிப்பது போல, இந்தப் போர் இறுதிப் போராக இருக்க வேண்டும்; இலங்கை இனி போரற்ற தீவாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லா ருமே விரும்புகின்றனர். ஆனால், அது இப் போது ராஜபக்ஷ கைகளில்தான் இருக்கிறது! இந்தப் பிரச்னை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஐ.நா. சபையின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்பட்டு, சம உரிமையுடன் இலங்கைத் தீவில் அனைத்துத் தரப்பாரும் வாழ்வதற்கு வழிகோலுவதுதான் இதற்கு ஒரே தீர்வாக இருக்கும். அதை அதி பர் ராஜபக்ஷ ஏற்றுச் செய்யாத வரையில், இலங்கையில் அமைதி என்பது பகல் கனவா கத்தான் இருக்கும்!
Dinamani






0 விமர்சனங்கள்:
Post a Comment