புலிகளின் அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான பு.சத்தியமூத்தி மரணம்
சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்தியமூர்த்தி சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புலம் பெயர் மக்களால் நன்கு அறியப்பட்ட இவர், தொலைக்காட்சிகள், வானொலிகள், நாளேடுகள் மற்றும் இணையங்களில் இவரது அரசியல் ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நிலவரம் அரசியல் ஆய்வு நிகழ்ச்சி, அரசியல் ஆய்வுப் பத்திகள், தாயக நிலவரம், வாராந்த அரசியல் கண்ணோட்டம், போன்றவற்றில் இவரது ஆய்வுகள் சுட்டிக்காட்டலாம்.
தாயத்தில் உள்ள ஊடக இல்லத்தில் தனது பணியை இறுதி வரைக்கும் திறம்படச் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் மண்டதீவைச் சொந்த இடமாகக் கொண்ட யாழ் இடம்பெயர்வுடன் வன்னியில் வாழ்ந்து வந்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment