புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சமடையக் கூடும்:கோதபாய
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சமடையக் கூடுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ஆட்களைக் கடத்தும் வலையமைப்பின் மூலம் குறித்த சிரேஸ்ட உறுப்பினர்கள் தப்பிச் செல்லக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே சூசை மற்றும் பொட்டு அம்மான் போன்றோர் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளார்களோ தெரியவில்லை, தமது உடமைகளையும் வீட்டையும் இலங்கை அரசாங்கம் எரித்து விட்டதென கூறினால் போதும் அங்கு அரசியல் தஞ்சம் கிடைத்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னமும் இலங்கையில் தங்கியிருப்பதாகவும், வெளிநாடொன்றுக்கு தப்பியோடுவது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதா அல்லது வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment