இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Friday, February 20, 2009

பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியின் முன்னணி அறிவிப்பாளர் உதயகுமாருக்கு புலிகள் கொலைப்பயமுறுத்தல்

பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியின் முன்னணி அறிவிப்பாளரும் அரசியல்அரங்கம் நிகழச்சித் தொகுப்பாளருமான உதயகுமாருக்கு பாரிஸில் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றனர்.நேற்று மாலை பிரான்சின் புறநகர் பகுதியான டிரான்சி என்னுமிடத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற மூன்று இனந்தெரியாத புலி உறுப்பினர்கள் வீட்டிலிருந்த அவரது மனைவியிடம் அரசியல்அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்துமாறும் இல்லையேல் பயங்கர விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும் என்று அவரது கணவரிடம் தெரிவிக்குமாறும் கூறிச் சென்றுள்ளனர்.

ரிஆர்ரி தமிழ்அலை வானொலியையும் ரிபிசி வானொலியையும் நாம் பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்துக்கொள்வோம். ஆனால் உங்கள் கணவர் அரசியல்அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று திருமதி உதயகுமாரிடம் இந்த புலிகள் கூறிச்சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக டிரான்சி பொலிசில் உதயகுமார் தரப்பில் முறையிடப்பட்டுள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தெரியவருகின்றது.

ரிஆர்ரி வானொலியில் இடம்பெற்றுவரும் அரசியல் நிகழ்ச்சிகளான உறவுப்பாலம், அரசியல்அரங்கம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் உதயகுமார் அவர்களே தொகுத்து வழங்கிவருகின்றார்.

புலம்பெயர்மண்ணில் வாழும் அரசியல் விமர்சகர்களில் முக்கியமானவராக கருதப்படும் உதயகுமாரின் அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபல்யம்வாய்ந்தவை.

உறவுப்பாலம் நிகழ்சி வாராவாரம் ஒரு அரசியல் பிரமுகரை நேயர்கள் நேரடியாக கேள்வி கேட்கும்வகையில் அமைந்தது. கடந்த வாரம் அமைச்சரும் ஈபிடிபி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததுடன், உதயகுமாருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்சியில் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈபிஆர்எல்எவ் செயலாளர் ரி. சிறிதரன்,சிறீ ரெலோ உதயன் போன்றவர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் முதல்தடவையாக தமிழ்மக்களை ஊடகம் ஒன்றின் ஊடாக மக்களைச் சந்தித்ததும் இந்த நிகழச்சியினுடாகவே என்பது குறிப்படத்தக்கது.

ஞாயிறுதோறும் இடம்பெறும் அரசியல்அரங்கம் நிகழ்ச்சியும் மிகவும் பிரபல்யமானது. வாராவாரம் முக்கிய அரசியல் நிகழ்வுகளின் தலைப்பில் நேயர்கள் தத்தமது கருத்துக்களை முன்வைக்கும் இந்த நிகழ்ச்சியில் புலிகளின் நடவடிக்கைகளை நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் வெளிப்படுத்தும் அதேவேளை, புலிகளின் ஆதரவாளர்களும் இந்தநிகழ்ச்ப்யில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு இடமளிக்கபட்டு வருகின்றது.

ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த நிகழச்சியில் கலந்துகொள்ளும் புலிகள் மிகக் கேவலமாக அந்த நிகழச்சியையும் வானொலியின் இயக்குநர் குகநாதனையும் தனிப்பட்டவகையில் தாக்கிவருவதை அவதானிக்க முடிகின்றது.

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top