பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி மீட்கப்பட்டுள்ளதாக படையினர் அறிவிப்பு
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பஜிரோ ஜீப் வண்டியொன்றை படையினர் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு விஷ்வமடு வடக்கு பகுதியிலிருந்து இந்த ஜீப் வண்டி மீட்கப் பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் 2002ம் ஆண்டு இடம்பெற்ற பிரமாண்டமான ஊடகவியலாளர் மாநாட்டுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த ஜீப்பிலேயே வந்ததாக பாதுகாப்பு தரப்பு உறுதி செய்துள்ளது. இதேவேளை புலிகள் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்ட பலரும் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பிரபாகரனை விரைவில் பிடித்து விடலாம் என படைத்தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment