கடற்புலிகளின் தலைவர் சூசையை இலக்கு வைத்துத் தாக்குதல்: பதினொரு பேர் பலி
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள,புதுக்குடியிருப்பின் வடக்காக அமைந்திருந்த கடற்புலிகளின் தலைவரான சூசையின் மறைவிடம் மீது விமானப்படையினர் நேற்று (06) மாலையில் பாரிய தாக்குதலை மேற்கொண்டதாக விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜானக நாணயக்கார தெரிவித்தார்.
விமானப் படையினரின் இந்தத் தாக்குதல் காரணமாக புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உட்பட பதினொரு பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விமானப் படைக்குச் சொந்தமான கிபீர்-7 ரக யுத்த விமானங்கள் நடத்திய தாக்குதல் காரணமாக, புதுக்குடியிருப்பின் வடக்காக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த இந்த சொகுசுக் கட்டடத் தொகுதி முற்றாகச் சேதமடைந்தது.
இந்தத் தாக்குதல் இடம் பெற்றபோது கடற்புலிகளின் தலைவர் சூசை அங்கிருந்ததாகவும் இச்சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டோ காயமடைந்தோ இருக்கலாமென உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment