மன்னார் ஆயர் ராயப்பு ஜோஸப்-மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்
மன்னார் ஆயர் வண. ராயப்பு ஜோஸப் தலைமையிலான குழுவினர் இன்று வன்னிப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.இந்தச் சந்திப்பு வன்னியிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இடைத் தங்கல் முகாம்களில் வாழும் மக்களின் தேவைகள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டதுடன் அவர்களுக்குத் தேவையான மருந்து வகைள் மற்றும் பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கு முழு ஆதரவினை வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வரும் மக்களைத் தங்க வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து இடைத்தங்கல் முகாம்களுக்கும் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment