சரணடைந்தார்களா? அல்லது கைது செய்யப்பட்டார்களா?
வவுனியா, தேவபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் பத்துப் பேரை படையினர் நேற்றுக் கைது செய்தனர்.இவர்களில் ஒன்பது ஆண் புலி உறுப்பினர்களும் ஒரு பெண் புலி உறுப்பினரும் அடங்குவதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட பெண் புலி உறுப்பினர் 17 வயதான வரெனவும் ஏனைய ஆண் புலி உறுப்பினர்கள் 20 வயதுக்கும் 33 வயதுக்குமிடைப்பட்டவர்களென்றும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் வவுனியா பொலிஸில் ஒப்பபடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன.
ஆனால் இவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.






0 விமர்சனங்கள்:
Post a Comment