புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மூடப்பட்டது : சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த இறுதி வைத்தியசாலையான புதுக்குடியிருப்பு வைத்தியசாலையும் மூடப்பட்டிருப்பதாக மனிதநேய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில நாட்களாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை அண்மித்த பகுதிகளில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்திருப்பதால் அங்கிருந்து வெளியேற வைத்தியர்களும், வைத்தியசாலை நிர்வாமும் தீர்மானித்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்த நோயளர்கள் பாதுகாப்பாக வடகிழக்குக் கரையோரப் பிரதேசமான புதுமாத்தளன் பகுதிக்கு இடம்மாற்றப்பட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளையின் பேச்சாளர் சரசி விஜயரட்ன தெரிவித்தார்.
அந்தப் பகுதியில் குடிநீர் வசதிகள் போதியளவு இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அந்தப் பகுதியில் தொடர்ந்தும் பணியாற்றிவருவதாக அவர் கூறினார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்துக்குள் நடத்தப்பட்ட தாக்குதல்களில் செவ்வாய்க்கிழமை 52 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 80 பேர் காயமடைந்திருப்பதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் தெரிவித்துள்ளார்.
“வன்னிப் பகுதியில் எஞ்சியிருந்த மருத்துவ மனையும் மூடப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment