விடுதலைப் புலிகள் இப்போது மிகக் குறுகியதொரு பகுதிக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர்:பிரிகேடியர் உதய நாணயக்கார
விடுதலைப்புலிகளின் கடல் மற்றும் ஆகாய நடவடிக்கைகளை முற்றாக சீர்குலைப்பதில் படையினர் வெற்றி பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் சகல விமான ஓடுபாதைகளையும் படையினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் அவர்களது ஆகாய நடவடிக்கைகளும் சாலை கடற்புலித் தளத்தை கைப்பற்றிய தன்மூலம் அவர்களது கடல் நடவடிக்கைகளும் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இன்று மிகக் குறுகியதொரு பகுதிக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தொடர்ந்தும் படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
விடுதலைப்புலிகள் தற்போது இருக்கும் இடமும் பாதுகாப்பு படையினரால் விரைவில் கைப்பற்றப்படும் .
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் .
எனினும் விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை படையினரிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைவது தான் அவர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே வழியென்றும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment