முத்துக்குமரன் தீக்குளிக்க யார் காரணம் ?
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் இலங்கையில் நடந்து வரும் ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமார் என்ற வாலிபர் சென்னையில் இன்று காலை தீக்குளித்தார்.
எல்லா ஊடகங்களும் அரசியல் தலைவர்கள் வழக்கம் போல் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் கண்டனங்கள் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள். இவர்களின் அறிக்கையில், ’தமிழ் ஈழம், போர் நிறுத்தம், இழந்து தவிக்கும்’ போன்ற வார்த்தைகளை எடுத்துவிட்டால், மீதம் இரண்டு வரி கூட மிஞ்சாது
முத்துக்குமரன் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் போது பா.ம.க எம்.எல்.ஏ வேல்முருகன் இன்று சட்டசபையில் இவ்வாறு பேசியுள்ளார்
முத்துக்குமார் என்பவர் சென்னையில் இன்று தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முத்துக்குமாரை காப்பாற்றுவதற்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும். ஒரு வேளை காப்பாற்ற முடியாமல் இறந்து போனால் அவருடைய குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்
ஆக முத்துகுமார் என்ற இளைஞரின் உயிர் 10 லட்சம் ரூபாய்.
ஈழத்தமிழரின் தியாக வரலாற்றில், முத்துக்குமாரின் தியாகமும், புகழும் நிலைத்து நிற்கும். தாய்த் தமிழகத்தின் இளந்தமிழ் மனங்கள் எரிமலையாக சீறத் தொடங்கிவிட்டதை இப்போதாவது தமிழருக்கு துரோகம் செய்யும் மத்திய அரசு உணரட்டும்
என்று உளறி கொட்டியுள்ளார் வைகோ. இதை எப்படி தியாகம் என்று இவர் சொல்லுகிறார் ? அப்படியே இதை தியாகம் என்றால் ஏன் இவர் இதை செய்யவில்லை. இதை தியாகம் என்றால் மற்ற இளைஞர்கள் இதை பின்பற்ற வேண்டும் என்கிறார் போல
எல்லாவற்றிருக்கும் மேலே திருமாவளவன்
ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார் தீக்குளித்திருக்கிறார். இதற்கு மேலேயும் இந்திய அரசு ஈழத்தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதைத் தடுக்க முடியாது. முத்துக்குமரனின் மரணத்துக்கு இந்திய அரசே காரணம்
என்று சொல்லியிருக்கிறார்.
முத்துக்குமரன் தீக்குளிக்க யார் காரணம் ?
சும்மா சீரியல் பார்த்துக்கொண்டிருந்தவர்களை அரசியல்வாதிகள் ஓட்டுக்காக மனித சங்கலி, பந்த், உண்ணாவிரதம், பேரணி, ரஜினாமா நாடகம், என்று ஆரம்பித்து உசுப்பிவிட்டது தான் காரணம்.
இவ்வளவு வாய்கிழிய பேசும் தமிழக தலைவர்கள் திருமங்கலம் இடைத்தேர்தலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? கவியரங்கத்தில் மட்டும் தான் பேச வேண்டுமா ? இலங்கை தமிழர் பிரச்சனை ப்ற்றி பிரச்சாரம் செய்ய தைரியமில்லாத தலைவர்களுக்கு பிரியாணி மட்டும் தான் போட தெரியுமா ?
இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்தால் தான் இவர்களுக்கு ஈழ தமிழர்கள் மீது பரிவு ஏற்படுமா ? இரண்டு வருஷம் முன்பு எங்கே போனது இந்த பாசம் ?
நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, போன்றவர்கள் செங்கல்பட்டு மணவர்களின் உண்ணாவிரத பந்தலில் மாணவர்களை உசுப்பிவிடுகிறார்கள். ஏன் இவர் பையன் “ஸ்டுடண்ட் நம்பர் ஒன்” சிபி இதில் கலந்துக்கொள்ள கூடாது ? தமிழ் சினிமா துறையினருக்கு பெரும் அளவு பணம் விடுதலைப்புலிகளிடமிருந்து வருகிறது என்ற குற்றச்சாட்டை நான் சொல்லவில்லை, காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் சொல்லுகிறார். இதில் நிச்சயம் உண்மை இருக்கும் என்று நம்புகிறேன்.
முத்துக்குமரன் சாவுக்கு அரசியல் வாதிகளை போல் மீடியாவுக்கும் பங்கு உள்ளது, அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல், இங்கே தங்கள் வியாபாரத்துக்கு கவர் ஸ்டோரி, exclusive என்று தமிழ் மக்களின் கஷ்டத்தை வியாபாரம் செய்கிறார்கள்.
ஹேமந்த் கர்க்கரே என்பவரை எத்தனை பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது? முத்துக்குமரன் இன்னும் எவ்வளவு நாள் மானாட மயிலாடவை மீறி நிற்கப்போகிறான் ?
முத்துக்குமரன் போல் இன்னும் எவ்வளவு முட்டாள்குமரன் உள்ளார்களோ ?
முத்துக்குமரனை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்துக்கு இட்லிவடையின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
http://idlyvadai.blogspot.com/2009/01/blog-post_30.html
0 விமர்சனங்கள்:
Post a Comment