புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கும் மீள் பரிசீலனை கிடையாது! அமெரிக்கா அறிவிப்பு
புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து எவ்வித மீள் பரிசீலனையும் கிடையாது என அமெரிக்கா நேற்று தெரிவித்துள்ளது.
புலிகள் அமைப்பு எமது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.அதே நிலைப்பாட்டிலேயே அமெரிக்கா தொடர்ந்தும் இருந்துவருகின்றது.என அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ரொபட் வூட் ஸீ நியூஸ் இணையத்தளத்திற்கு வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சில தமிழ் அமைப்புகள் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரியுள்ளமை பற்றி கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து மீள் பரிசீலனை செய்கின்ற எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக நான் அறியவில்லை என்றும் வூட் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள சில தமிழ் அமைப்புகள் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமெனக்கோரி அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளிங்டனுக்கு கடிதமொன்று எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment