17,010 லீட்டர் மண்ணெண்ணெய் படையினரால் கண்டுபிடிப்பு
முல்லைத்தீவு, உடையார் கட்டுக்குளம் பிரதேசத்தில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த 17,010 லீட்டர் மண்ணெண்ணெயை பாதுகாப்புப் படையினர் நேற்று மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.
ஒவ்வொன்றும் 210 லீட்டர்களைக் கொண்ட 81 பரல்களில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டு நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார தலைமையிலான படைப்பிரிவினர் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போதே இவை மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இராணுவத்தின் 57வது படைப்பிரிவினர் கிளிநொச்சி பிரதேசத்தில் நடத்திய தேடுதலில் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் மீட்டெடுத்துள்ளனர்.
ஆர்.பி.ஜி. குண்டுகள் 13, கிளேமோர் குண்டுகள் 4, 120 மி.மீ. ரக மோட்டார் ஷெல் 1, காஸ் சிலிண்டர் 1, ரி-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் ரவைகள் 2000, கைக் குண்டுகள் 5 மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர்.
இராணுவத்தின் மூன்றாவது அதிரடிப் படையினர் அம்பகாமம் பிரதேசத்தில் நடத்திய தேடுதலின்போது அதி சக்திவாய்ந்த கிளேமோர் குண்டு 1, 60 மி.மீ. ரக மோட்டார் குண்டுகள் 2 மற்றும் துப்பாக்கிகளையும் மீட்டெடுத்துள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment