புதுக்குடியிருப்பு இரண இரப்பாடுகுளம் பகுதியில் கடும் மோதல்கள் -30 புலிகள் பலி
(பிந்திய இணைப்பு) புதுக்குடியிருப்பு இரண இரப்பாடுகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் 30 போராளிகள் வரை கொல்லபட்டுள்ளதாகவும், புதுக்குடியிருப்பிலிருந்த விடுதலைப் புலிகளது நீதிமன்ற கட்டிடத்தை படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் , யுத்த சூன்ய பகுதிக்கு 400 மீட்டர் தூரத்திலேயே படையினர் நிற்பதாகவும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்......
புதுக்குடியிருப்பு இரண இரப்பாடுகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் 30 போராளிகள் வரை கொல்லபட்டிருப்பதாக படையினர் தெரிவித்துள்ளனர். படைத் தரப்பு இழப்புகள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளது முக்கிய தலைவர்களான பொட்டு அம்மான் மற்றும் சூசை ஆகியோரது காரியாலயங்கள் அங்கிருப்பதாகவும் படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பிலிருந்த விடுதலைப் புலிகளது நீதிமன்ற கட்டிடத்தையும் சற்று நேரத்துக்கு மன் படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் , யுத்த சூன்ய பகுதிக்கு 400 மீட்டர் தூரத்திலேயே படையினர் நிற்பதாகவும் அங்கிருந்து வரும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment