949 சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சம்
புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 949 பொது மக்கள் பாதுகாப்புப் படை யினரிடம் தஞ்சமடைந்துள்ள தாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இவர்களில் 810 பொது மக்கள் இராணுவத்தினரிடமும், 139 பொது மக்கள் கடற்படை யினரிடமும் தஞ்சமடைந்துள் ளனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவினரிடம் 810 பொது மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இதேவேளை டிங்கிப் படகுகள் மூலம் இரு தடவைகளாக 129 பொது மக்கள் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.
முதலாவது குழுவில் 126 பொது மக்களும் இரண்டாவது குழுவில் 13 பொது மக்களும் படகுகள் மூலம் தப்பி வந்துள்ளனர்.
இவர்களில் 43 ஆண்கள், 43 பெண்கள் மற்றும் 40 சிறுவர்கள் அடங்குவர்.
இவர்களில் காயமடைந்தவர்களுக்கு கடற்படையினர் உடனடி முதலுதவிகளை வழங்கியுள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment