‘அதிதிகளை புகைப்படம் எடுத்த வேளை பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்தது’
எனது உடலெல்லாம் இரத்தமும், சதைத்துண்டுகளுமே நேரில் கண்டதை விபரிக்கிறார் ஜாவித்
எனது ஆறு வயது மகனை பள்ளிவாசலுக்குள் அழை த்துச் செல்லுமாறு சக ஊழியரான மொஹமட் அஸ்ரி னிடம் கூறி ஒப்படைத்துவிட்டு பிரதம அதிதிகளை புகைப் படம் எடுத்துக் கொண்டிருந்த வேளை பாரிய சத்தத்து டன் குண்டு வெடித்தது.
எங்கும் இரத்தமும், சதைத் துண்டுகளுமே காணப் பட்டன. எனது உடல் எல்லாம் இரத்தமும் சதைத் துண்டு களுமாகவே இருந்தது. அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் ரபீக், நயாத் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தவாறு காப்பாற்றுமாறு கதறினர். எங்கும் மரண ஓலங்களாகவே தென்பட்டன.
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஊடகப் பிரிவில் கடமையாற்றும் ஏ. எஸ். எம். ஜாவித் மாத் தறை, அக்குரஸ்ஸ, கொடபிட்டிய பள்ளிவாசல் அருகே இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர் பாக தினகரனுக்கு தான் நேரில் கண்டதை மேற்கண் டவாறு விபரித்தார்.
நபி பெருமானாரின் பிறந்த தினத்தை நினைவுகூரும் முகமாக நடத்தப்படுகின்ற மீலாதுன் நபி தேசிய விழா அக்குரஸ்ஸ கொடபிட்டிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவை காணவும், பங்குபற் றவும் திணைக்களத்தின் ஊடக பிரிவின் கடமையை நிறைவேற் றவும் என தனது 6 வயது மகனான மொஹமட் இன்சாமுடன் சென்ற ஜாவித் தான் முகம்கொடுத்த சம்பவம் தொடர் பாக மேலும் விளக்கமளிக்கையில் :-
நேற்றுக்காலை தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு அக்குரஸ்ஸ, கொடபிட்டிய கிராமம் முழுவதும் களை கட்டியிருந்தது.
இப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி சகல இன மக்களும் ஒன்று சேர்ந்ததாக சுமார் 300 வாகனங்கள் அடங்க லாக ஊர்வலமும் நடத்தப்பட்டது.
கொட பிட்டிய பள்ளிவாசல் வளவில் அலங்கார உற்சவ மேடையும் போடப் பட்டிருந்தது.
முஸ்லிம் மத பெரியார்கள் அனைவரும் அணிவகுத்தபடி முன்னால் வந்து கொண்டிருக்க அதன் பின்னால் ‘ரபான்’ இசைக் கலைஞர்கள் ரபான் இசைத்துக் கொண்டு வர, அமைச்சர்களான மஹிந்த விஜேசேக்கர, ஏ. எச். எம். பெளஸி, சந்திரசிறி கஜதீர, அமீர் அலி, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள உத்தியோகத்தர்களும் வந்துகொண்டிருந்தனர்.
சமய பெரியார்கள் அனைவரும் ஊர்வல மாக வந்து பள்ளிவாசல் வளவுக்குள் செல்ல முற்பட்ட போது என்னுடன் வந்த எனது மகனை சக ஊழியரான மொஹமட் அஸ்ரின் என்பவரிடம் பள்ளிவாசலுக்குள் அழைத்துச் செல்லுமாறு அனுப்பிவிட்டு படப்பிடிப்புக்காக பிரதம அதிதிகள் வரும் பக்கம் திரும்பினேன்.
எனது மகனும் நண்பரும் பள்ளிவாசல் மதிலைக் கடந்தனர். மதப் பெரியார்கள் உற்சவ மேடையில் ஏறிக்கொண்டு இரு ந்தனர்.
பிரதம அதிதிகள் பங்கமிருந்து பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்தது.
எங்கும் ஆட்கள் சிதறி விழுந்து கிடந்தனர். மரண ஓலமே கேட்டது. அமைச்சர் மஹிந்த விஜேசேக்கரவை சிலர் தூக்கிக்கொண்டு ஓடினர்.
எமது அலுவலகத்தின் சக ஊழியர்களான ரபீக் மற்றும் நஸாத் ஆகியோர் நிலத்தில் கிடந்தவாறு இரத்தக் காயங்களுடன் காப்பாற்றுமாறு கதறி அழுதனர். அவர்களை தூக்குவதற்குக்கூட ஒருவரும் இல்லை. நானும் கதறியவாறே அருகிலி ருந்தவர்களை அழைத்து காயமடைந்த வர்களை தூக்கினேன்.
மிகவும் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட விழா மரண ஓலத்துடன் இடைநடுவில் நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் தெரிவித் தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment