புலிகளின் கொடுஞ்செயல்
புலிகளின் இன்னொரு கொடு ஞ்செயல். நேற்றுமுன்தினம் அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள கொடபிட்டியவில் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 46 பேர் காயமடைந்துள் ளனர்.
நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் தேசிய மீலாத் விழா தொட ர்பான ஊர்வலத்திலேயே இத் தற்கொலை தாக்குதலைப் புலிகள் நடத்தியிருக்கின்றார் கள். சிறுபான்மை சமூக மொன்றின் அடிப் படை உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறும் புலிகள் இன்னொரு சிறுபான்மை சமூகத்தின் மத உணர்வுகளை மதிக்காமல் அச் சமூகத்தின் புனித நாளொன்றில் கொடு மையான தற்கொலைத் தாக்குதலை நடத்தி யிருப்பது இவர்களின் முகமூடியைக் கிழித் துப் பயங்கரவாத நிஜமுகத்தை வெளிப் படுத்துகின்றது.
உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்க ளும் அப்பாவிகள். புலிகளுக்கோ தமிழின த்துக்கோ எதிராக எவ்வித செயற்பாட்டி லும் எந்தக் காலத்திலும் ஈடுபடாதவர்கள்.
இவர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவதன் மூலம் தங்கள் அரசியல் இல க்கை அடைய முடியும் என்று புலிகள் கரு துவார்களேயானால் அதைப் போன்ற முட்டாள்தனமான கற்பனை வேறெதுவும் இருக்க முடியாது.
இதுவரை புலிகள் இது போன்ற தாக்குதல்கள் மூலம் எத்தனையோ பேரைப் பலி கொண்டிருக்கின்றார்கள். சிங் களவர், தமிழர், முஸ்லிம்கள் என ஆயிரக் கணக்கானோர் புலிகளின் கண்மூடித்தன மான தாக்குதல்களுக்குப் பலியாகியிருக் கின்றார்கள்.
இத்தனை தாக்குதல்களுக்குப் பின்னரும் புலிகள் தங்கள் தனிநாடு என்ற இலக்கை அண்மித்துச் செல்லவில்லை. அந்த இலக்கு அவர்களிடமிருந்து துரிதமா கவே கைநழுவுகின்றது. முழுமையாகக் கை நழுவும் நிலை இப்போது வந்துவிட்டது.
இந்த இறுதி நேரத்திலாவது யதார்த்தத் தைப் புரிந்துகொண்டு மக்கள் விரோத வன் முறைச் செயற்பாடுகளிலிருந்து விலகி ஜன நாயக வாழ்க்கை முறைக்கு அவர்கள் திரு ம்பவில்லையென்றால் வரலாறு அவர் களை மன்னிக்காது.
புலிகள் மதங்களையும் மதிக்கவில்லை. மற்றைய இனங்களையும் மதிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மனித உயிர்களை மதிக்கவில்லை. இந்த நிலையில் விடுதலைப் போராளிகள் என்று இவர்கள் எப்படித் தங்களை அழைக்க முடி யும்?
புலிகளுக்கு ஆதரவாகத் தமிழக அரசியல் களத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் தமிழ கத் தலைவர்கள் கொடபிட்டியவில் புலிக ளின் கொடுஞ்செயல் பற்றி மெளனம் சாதி ப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இத் தலைவர்களுக்குத் தமிழ்நாட்டில் முஸ் லிம்களின் வாக்குகள் தேவை. ஆனால் இலங்கையில் புலிகள் நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தன்று முஸ்லிம்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவது பற்றி எது வும் பேசமாட்டார்கள்.
தோல்வியின் விளிம்பிலே நிற்கின்ற விரக் தியினால் நாட்டின் வெவ்வேறு பகுதிக ளில் இவ்வாறான தாக்குதல்களை நடத்து வதற்குப் புலிகள் முயற்சிக்கக் கூடும். வன் னியில் இடம்பெறுகின்ற இராணுவ நடவ டிக்கையில் தீவிரம் காட்டுகின்ற அதேநே ரம் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பாது காப்பு ஏற்பாடுகளில் அரசாங்கம் தீவிர கவ னம் செலுத்த வேண்டும்.
இவ்விடயத்தில் மக்களுக்கும் பொறுப்பு உண்டு. தாங்கள் வாழ்கின்றதும் நடமாடுவதுமான பிரதேசங் களின் பாதுகாப்பு தொடர்பாகச் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்கு வதற்கு மக்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.
புலிகளின் மக்கள் விரோத செயற்பாடுக ளைச் சர்வதேச சமூகம் சரியாகப் புரிந்து கொள்ளக் கூடிய இரண்டு சம்பவங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றிருக்கின்றன. மீலாத் விழாவில் நடத்திய தற்கொலைத் தாக்கு தல் ஒரு சம்பவம்.
வன்னி இராணுவ நட வடிக்கைப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கென எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருட் களை இறக்கவிடாமல் அக் கப்பல் மீது மோட்டார் தாக்குதல் நடத்தியது மற்றைய சம்பவம். புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்தப் பின்னணியிலேயே சர்வதேச சமூகம் பார் க்க வேண்டும்.
தினகரன்






0 விமர்சனங்கள்:
Post a Comment