சிவிலியன்களின் பாதுகாப்புக்கு புலிகளே அச்சுறுத்தல்
அரசின் இராணுவ நடவடி க்கை இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கும் நேரத்தில் இலங்கைக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் சிவிலியன்களின் அவ லங்கள் பற்றித் தெரிவிக்கப்படும் கருத்து கள் உண்மையான பிரச்சினையை விட்டு விலகிச் செல்வனவாக உள்ளன.
சிவிலிய ன்களின் பாதுகாப்புக்காக யுத்தநிறுத்தம் செய்ய வேண்டும் என்பதாகவே இக் கரு த்துகள் உள்ளன. சிவிலியன்களின் பாது காப்பு யுத்தநிறுத்தத்தில் மாத்திரம் தங்கி யுள்ளது என்ற கருத்து சரியானதல்ல.
மோதல் பகுதியிலிருந்து வெளியேறிப் பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வந்த சிவிலியன்கள் யுத்தநிறுத்தம் இல்லாமலே எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாதிருக்கி ன்றனர். எனவே யுத்தநிறுத்தம் மாத்தி ரமே சிவிலியன்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களே மோதல் பிரதேசத்தில் இப்போது சிக்கியிருப்பவ ர்கள். இம்மக்கள் அங்கிருந்து வெளியே றுவதற்குப் புலிகள் அனுமதிக்காததா லேயே பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். இம் மக்களின் பாதுகாப்பு பற்றிப் பேசுபவர் கள் இவர்கள் வன்னியிலிருந்து வெளியே றுவதற்குப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று இன்றுவரை கூறவில்லை.
அரசாங்க படையினருக்கும் புலிகளுக்கும் இடையி லேயே மோதல் இடம்பெறுகின்றது. இந்த மோதலில் சிவிலியன்களுக்கு நேரடியான சம்பந்தம் இல்லை. மோதல் பகுதியிலி ருந்து சிவிலியன்கள் வெளியேறுவது அவ ர்களின் பாதுகாப்புக்குப் பொருத்தமான நடவடிக்கை என்பதால் அதற்கான அழு த்தத்தைப் புலிகள் மீது பிரயோகிக்க வேண் டும்.
மோதல் பிரதேசத்திலிருந்து வெளியேறும் நோக்கம் அங்குள்ள சிவிலியன்களுக்கு இல்லை எனக் கூற முடியாது. புலிக ளுக்கு வக்காலத்து வாங்கும் உள்ளூர் மற் றும் வெளிநாட்டு அரசியல்வாதிகளும் தவறான தகவல்களை நம்பிச் செயற் படும் சர்வதேச அமைப்புகளும் மக்கள் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை என கூறுவதைப் பொய்யாக்கும் வகை யில் பல சம்பவங்கள் அடிக்கடி இடம் பெறுகின்றன.
வள்ளங்கள் மூலமும் வேறு விதமாகவும் மோதல் பிரதேசத்திலிருந்து வெளியேறும் மக்கள் மீது புலிகள் தாக் குதல் தொடுக்கும் பல சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அங்கிருந்து வெளியே றும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் இறந்துள்ள னர். சில தினங்களுக்கு முன் வள்ளமொ ன்றில் வெளியேறிய சிவிலியன்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்த தில் ஒன்பது வயதுச் சிறுவனொருவன் இறந்த செய்தி பத்திரிகைகளில் வெளியா கியிருந்தது.
வெளியேறுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன் புலிகள் நிற்கவில்லை. வன்னியிலுள்ள மக்களைப் பலவந்தமாக யுத்தசேவையில் ஈடுபடுத்துகின்றார்கள் என்ற செய்தியும் வெளியாகியிருக்கின்றது. ஐ.நா சபையின் இலங்கைப் பணியாளர் ஒருவரையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவரையும் கட்டாய சேவைக் காகப் புலிகள் கடத்திச் சென்றிருக்கின்றா ர்களென ஐ.நா சபையின் இலங்கைக் கிளை கூறுகின்றது. முன்னரும் ஐ.நா சபை யின் ஊழியரொருவர் புலிகளால் கடத்தப் பட்டிருக்கின்றார்.
மோதல் பிரதேசத்திலுள்ள மக்களை வெளி யேற விடாது தடுத்து வைத்திருப்பதும் மறைவாக வெளியேறுபவர்கள் மீது துப் பாக்கிப் பிரயோகம் செய்வதும் மோதல் நடவடிக்கைகளில் சிவிலியன்களைப் பல வந்தமாக ஈடுபடுத்துவதும் சிவிலியன்க ளின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் புலி களிடமிருந்தே வருகின்றது என்பதை உறு திப் படுத்துகின்றன. எனவே சிவிலியன் களின் பாதுகாப்புக்கான கோரிக்கை புலிகளை நோக்கியதாக இருப்பதே நியாயமானது.
தினகரன்






0 விமர்சனங்கள்:
Post a Comment