வருஷாவைக் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலைசெய்த நபர் போலீஸாரால் சுட்டுக் கொலை
மூன்று கோடி ரூபா பணத்தை கப்பமாக கேட்டு திருகோணமலை பாலையூற்றில் வசித்து வந்த தமி்ழ் கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஜுட் றெஜி (6 வயது) எனும் சிறுமியை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்த குற்றவாளியான கணனி ஆசிரியரும் சிகரம் இணைய வானோலியின் பணிப்பாளரும் எனக்கூறப்படும் நபர் சற்று நேரத்துக்கு முன் போலீஸ் ஜீப்புக்குள் வைத்து கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை சம்பவம் நடந்த இடமான மாட்டாடுபிட்டி எனும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது போலீஸ்காரர் ஒருவரது கழுத்தை நெரித்து தப்ப முயன்ற போதே போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டதாக திருகோணமலை போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இக்கொலை தொடர்பாக முன்னர் எமக்கு கிடைத்த தகவலின்படி மூன்று கோடி ரூபா பணத்தை கப்பம் பெற கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஜுட் றெஜி வருஷா (6 வயது) வின் கொலை தொடர்பாக போலீஸார் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் நால்வரை கைது செய்துள்ளார்கள். கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்ட ஆறு வயது மாணவி வர்ஷா ஜுட் ரெஜியின் பூதவுடல், பெட்டி சீல்வைக்கப்பட்ட நிலையில் பாலையூற்றுபூம்புகாரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் பூதவுடலுக்கு, அவர் படித்த திருகோணமலை சென். மேரிஸ் பெண்கள் கல்லூரியின் ஆசிரியைகள், அதிபர் அருட் சகோதரி எம்.பவளராணியின் தலைமையில் அஞ்சலி செலுத்துவதையும் சிறுமியின் அம்மம்மா அழுவதையும் காணலாம். ..
வருஷாவின் தாய்
அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் வருஷாவின் பாடசாலை பை , தண்ணீர் போத்தல் உட்பட சில பொருட்களை கண்டெடுத்துள்ளதாக திருகோணமலை போலீஸ் அதிகாரி வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அக்கொலை தொடர்பான ஒருவர் ஒரு மாதத்துக்கு மேல் வருஷாவுக்கு கணனி கற்பிப்பதற்கு என்று வீட்டுக்கு வந்து சென்ற இளைஞர் என சிறுமியின் உறவினர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சிறுமியின் கொலை தொடர்பான வைத்திய பரிசோதலையின் பின் வருஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக போலீஸ் அதிகாரி வாஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். சிறுமியின் உடலத்தை கண்டெடுத்த போது அவரது வாய்க்குள் துணிகள் திணிக்கப்பட்டு பிளாட்டரால் ஒட்டப்பட்டிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கொலை தொடர்பான முக்கிய சந்தேக நபர், கணனி பயிற்சியாளரும் சிகரம் இணைய வானோலி நடத்துனர் என்பதும் தெரிய வந்த பின்னர் அந்நபரிடமிருந்து சிகரம் பணிப்பாளர் என அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளருக்கான அடையாள அட்டையும் கிடைக்கப்பெற்றுள்ளதாக போலீஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
சிகரம் இணைய வானோலி மூலம் சிறுவர்களது நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளதாகவும், திருகோணமலை சிவன் கோவில் அருகாமையிலேயே இவரது இணைய வானேலி சேவை செயல்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனது வானோலியை விரிவுபடுத்துவதற்காகவே தாம் குழந்தையைக் கடத்தி கப்பம் கேட்டதாக அவர் போலீஸாருக்கு தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்படவர்களில் மற்றுமொரு இளைஞர் திருகோணமலை போலீஸ் தலைமையகத்தின் பெண் போலீஸ்காரர் ஒருவரின் மகன் எனவும் போலீசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
வருஷாவின் குடும்பத்தினர் தமிழ் கத்தோலிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையார் தோகாவில் சாரதியாக பணியாற்றுகிறார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment