கடைசிப் பிரதேசத்தையாவது புலிகளால் தக்கவைக்க முடியுமா?
வன்னியில் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான போர் இறுதிக் கட்டத்தை அடைந்திருப் பதாக பாதுகாப்புத் தரப்பு கூறுகின்றது.
சண்டைகள் மிகவும் தீவிரமடைந்து இருதரப்பு இழப்புகளும் பெருமளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
படைத்தரப்பிலும் இழப்புகள் இப்போது பெருமளவில் அதிகரித்திருப்பதை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா உறுதி செய்திருக்கிறார்.
புலிகள் இயக்கம் இப்போது வெறும் 21.5 சதுர கி.மீ பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டிருப்பதாகப் படைதரப்பு கூறுகின்ற போதும் சண்டைகள் இன்ன?ம் தீவிரமடைந்து வருகின்றன.
புலிகள் பூநகரியில், கிளிநொச்சியில், முல்லைத்தீவில் காட்டிய எதிர்ப்பை விடவும் பல மடங்கு அதிகமான எதிர்ப்பைப் புதுக்குடியிருப்புக் களமுனையில் காண்பித்து வருவதை பாதுகாப்புத் தரப்பு உறுதி செய்திருக்கிறது.
புலிகளைப் பொறுத்தவரையில் இப்போதிருக்கின்ற பிரதேசத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டால் அவர்களால் மரபு ரிதியான சமர்களை நடத்த முடியாது போய்விடும்.
எனவே இருக்கின்ற சிறிய தளப் பிரதேசத்தையாவது தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற நோக்கில் அவர்கள் தமது உச்சக் கட்ட படை வளங்களைப் பயன்படுத்தி வருவதாகத் தெ?கிறது.
புலிகள் இப்போது மிகவும் அதிகளவிலான சூட்டுவலுவையும் அனுபவம் மிக்க போராளிகளையும் களத்தில் இறக்கியிருப்பதால் தமது தரப்பில் இழப்புகள் அதிகரித்திருப்பதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன் சேகா கூறியிருக்கிறார்.
புலிகள், கடல்வழியாக அண்மையில் ஆயுதங்களைத் தரையிறக்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் படைத்தரப்புக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
காரணம் அவர்கள் இப்போது போர்முனை யில் பயன்படுத்தும் ஆயுதங்களின் அளவு மற்றும் திறன் என்பன அதிகமாக உள்ளன.
அதைவிட கடந்த வாரம் விமானப்படையின் பெல்212 ஹெலிகள் மீது அவர்கள் "சாம்' ஏவுகணைகளை ஏவியிருக்கின்றனர்.
புலிகளுக்குக் கடல்வழியாக ஆயுதங்கள் கிடைப்பது இன்னமும் தடுக்கப்படவில்லை என்பதை இதன் மூலம் இராணுவத் தரப்பு உறுதிசெய்திருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே கடந்த வாரம் புலிகள் மீண்டும் ஒரு ஊடறுப்புத் தாக்குதலை வன்னிக் களமுனையில் நடத்தியி ருந்தனர்.
ஏற்கெனவே இந்தமாதம் 4ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் பாரியளவிலான தாக்குதல்களை நடத்தியிருந்தனர். 10ஆம் திகதி வரை புதுக்குடியிருப்புக்கு வடக்கே புலிகளின் ஊடறுப்புத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்றிருந்தது.
அதேபோன்று கடந்த புதன்கிழமை அதிகாலையும் புலிகள் பாரியதொரு தாக்குதலை நடத்தினர்.
அதிகாலை 2மணியளவில் அம்பலவன்பொக்கணைக்கு மேற்கேயுள்ள இரணைப்பாலை கிழக்கு மற்றும் தேவிபுரம் பகுதிகளில் இந்த ஊடறுப்புத் தாக்குதல் இடம்பெற்றிருந் தது.
58 ஆவது டிவிசனின் 7ஆவது சிங்க றெஜிமென்ட், 8ஆவது கஜபா றெஜிமென்ட், 20ஆவது கஜபா றெஜிமென்ட் ஆகியவற்றின் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்துக் கொண்டு முன்னேற சுமார் 200 புலிகள் முற்பட்டனர்.
அதிகாலை வெடித்த சண்டையின் பின்னர் 7ஆவது சிங்க றெஜிமென்ட்டின் கட்டுப்பாட் டில் இருந்த 400 மீற்றர் நீளமான முன்னரங்க நிலைகள் புலிகள் வசம் வீழ்ச்சியடைந்ததாக தெரிகிறது.
இதன்பின்னர் புலிகள் இரண்டாவது கட்ட பாதுகாப்பு நிலைகளை ஊடறுக்க முற்பட்ட போது அதிகாலை 5.30 மணியளவில் கடும் சண்டை வெடித்தது.
பலமணி நேரமாகத் தொடர்ந்த மோதலை அடுத்துப் புலிகளின் முயற்சியை முறியடித்த தாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருந் தன.
அதேவேளை புலிகள் தமது அணிகளை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அனுப்புவதற்காகவே இந்தத் தாக்குதலை நடத் தியிருக்கலாம் என்று படைதரப்பு சந்தேகம் கொண்டிருக்கிறது.
புலிகளின் ஊடறுப்புத் தாக்குதல் தொடங் கிய பின்னர் கொமாண்டோப் படைப்பிரிவு மற் றும் விசேட படைப்பிரிவு ஆகியவற்றை உத விக்கு அழைத்து 58ஆவது டிவிசன் தளபதி பிரிகேடியர் சவீந்திர சில்வா நிலைமையைச் சமாளித்துக் கொண்டார்.
புலிகளின் தாக்குதலை முறியடிக்கப் படையி னருக்கு 15 மணி நேரத்துக்கும் மேல் தேவைப் பட்டிருக்கிறது. புதன்கிழமை மாலை படையி னர் இழந்த தமது முன்னரங்க நிலைகளை மீளக் கைப்பற்றினர்.
இதன்பின்னர் தமது பிரதேசத்துக்குள் ஊடுரு வியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட புலிக ளைத் தேடியழிக்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டதாகவும் தகவல். புலிகள் இந் தப் பகுதியில் தொடர்ச்சியாக நடத்தி வருகின்ற ஊடறுப்புத் தாக்குதல்களுக்கு 2 நோக்கங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முதலாவது புதுக்குடியிருப்பு மேற்குப் பகுதிக்குள் பலமான தமது தாக்குதல் அணிகளை ஊடுருவச் செய் வதாகும் அடுத்தது படையினரின் தற் போதைய முன்னரங்க நிலைகளைக் கைப் பற்றி புதுக்குடியிருப்பில் இருந்து இரணைப் பாலை வழியாக புதுமாத்தளனுக்குச் செல்லும் வீதியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவ தாகும்.
இந்த வீதியைக் கைப்பற்றுவதன் மூலம் கரையோரப் பாதுகாப்பு வலயத்தின் பாது காப்பை குறைந்த பட்சமேனும் உறுதிப்படுத்து வது புலிகளின் நோக்கமாக இருக்கலாம்.
இதனிடையே கடந்த புதன்கிழமை அதி காலை அம்பலவன்பொக்கணைக்கு மேற்கே புலிகள், ஊடறுப்புத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த போது சமநேரத்தில் புதுக்குடி யிருப்புக்கு கிழக்கேயிருக்கும் 53ஆவது மற் றும் 68ஆவது டிவிசனின் முன்னரங்கப் பாது காப்பு நிலைகள் மீதும் தாக்குதலை நடத்தி யிருந்தனர்.
மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் தலைமையிலான 53ஆவது டிவிசனின் 5 ஆவது மற்றும் 7ஆவது கெ?னுவோச் படைப் பிரிவுகள் மற்றும் 68ஆவது டிவிசனின் 1 ஆவது கஜபா றெஜிமென்ட் ஆகியவற்றின் முன்னரங்க நிலைகள் மீதே தாக்குதல் நடத்தப் பட்டது.
இது பெருமெடுப்பிலான தாக்குதலாக இல்லாவிட்டாலும் புலிகளின் 5 சடலங்களை கைப்பற்றியதாகப் படையினர் தெரிவித்திருந்த னர்.
எனினும் கடந்த வார நடுப்பகுதியில் நடந்துள்ள உக்கிரமான சண்டைகள் குறித்து தகவல் வெளியிட்ட பாதுகாப்புத் தரப்பு இதில் படையினருக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.
அதேவேளை புலிகள் தரப்போ இப்படியான சண்டைகள் நடந்ததாகக் கூடத் தகவல் வெளியிடவில்லை.
புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் சுருங்கியுள்ள போதும் அவர்கள் நடத்தும் கடுமையான தாக்குதல்கள் காரணமாகப் படைத்தரப்பு புதிய படையினரைக் களமிறக்கி வருகிறது.
இதற்கிடையே கடந்த புதன்கிழமை புதுக்குடியிருப்புக்கு வடக்கேயும், கிழக்கேயும் நடைபெற்ற சண்டைகளின் போது காயமுற்ற பெருமளவு படையினரை ஏற்றச் சென்ற ஹெலிகள் மீது புலிகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக விமானப்படை அறிவித்துள்ளது.
7ஆவது ஹெலிகொப்டர் ஸ்குவாட்ரனைச் சேர்ந்த இந்த ஹெலிகளின் மீது புலிகள் "சாம்' ரகத்தைச் சேர்நத இரண்டு ஏவுகணைகளை ஏவியதாகவும் ஆனால் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறைகளை இயக்கியதன் மூலம், விமானிகள் ஹெலிகளை சேதமின்றி அனுராதபுரத்துக்கு கொண்டு சென்றதாகவும் விமானப்படை கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் நான்காவது கட்ட ஈழப்போரில் அதிகளவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தவில்லை என்று விமானப்படை கூறியுள்ளது.
இதற்கு முன்னர் வாகரையில் கிபிர் விமானங்கள் மீது ஒரு தடவையும், இரணைமடுவில் மிக் விமானங்கள் மீது ஒரு தடவையுமே புலிகள் சாம் ஏவகணைகளைப் பாவித்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகின்றது.
அதேவேளை 3ஆவது கட்ட ஈழப்போரில் புலிகள் "சாம்' ஏவுகணைகளைப் பயன்படுத்தி 12 விமானங்களையும், ஒரு கடற்படைப் படகையும் அழித்ததாக அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.
உடையார்கட்டுப் பகுதியில் புலிகளின் மறைவிடம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த சாம்14 ஏவுகணைகள் பதின்மூன்றின் வெற்றுகுழாய்களைப் படையினர் கைப்பற்றியிருந்தனர்.
இவை 1995 ஏப்ரல் 28ஆம் திகதிக்கும் 2000 ஒக்ரோபர் 23 ஆம் திகதிக்கும் இடைப் பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட் டவை என் றும் இந்த ஏவுகணைகள் எங்கு, யாரால், எதன் மீது, எப்போது தாக்குதல் நடத்தப்பட்டது என்ற விபரங்கள் குறிக்கப்பட்டிருந்த தாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்தது.
இந்த ஏவுகணைகள் கம்போடியா வழியாகப் புலிகளுக்கு கிடைத்திருக்கலாம் என்று சந்தே கம் தெரிவித்துள்ள விமானப்படை இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது.
இந்தநிலையில் தான் இரண்டு ஹெலிகளின் மீது புலிகளால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
சண்டைகள் உக்கிரமடைந்துள்ள கட்டத்தில் இன்னும் சில நாட்களில் புலிகளின் கடைசிப் பிரதேசத்தையும் கைப்பற்றி விடுவோம் என்று அரசாங்கம் கூறினாலும் புலிகளின் பலம் அதற்கு எந்தளவுக்கு இடமளிக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
சுபத்ரா
0 விமர்சனங்கள்:
Post a Comment