கனடிய தமிழர்களின் போராட்டம்
ரொறன்ரோவிலிருந்து இலங்கதாஸ் பத்மநாதன்
கனடாவில் தமிழர்கள் அதிகளவில் புலம்பெயர்ந்து வாழும் ரொறன்ரோ மற்றும் மொன்றியலில் இந்த வாரம் மீண்டும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என இப்போராட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடாவில் தமிழர்கள் மேற்கொண்ட மிகப்பெரிய எதிர்ப்பு நிகழ்வு இதுவென கனடாவின் பிரதான செதி ஊடகங்கள் போராட்டம் குறித்து செதி வெளியிட்டன.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலரும் வயது பேதமின்றி விடுதலைப் புலிகளின் கொடியினை ஏந்தியிருந்தனர். விடுதலைப் புலிகள் மீதான கனடிய அரசாங்கத்தின் தடையை எதிர்த்தும் கண்டனக்குரல்கள் எழுப்பப்பட்டன. கனடாவில் விடுதலைப் புலிகள் 2006ம் ஆண்டுமுதல் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடைசெயப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் முதன்மை அமைப்பு என்ற குற்றச்சாட்டில் உலகத் தமிழர் இயக்கமும் தடைசெயப்பட்டது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய செயல்பாடுகள் பலவும் நிறுத்தப்பட்டன.
இருந்தபோதிலும் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறித்த கொடிகளை ஏந்திப் போராட்டம் நடத்தியமை சட்டத்திற்கு எதிரானதல்ல என காவல்துறை கூறியுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவான்றில் கையொப்பமிட்டு கனடிய பிரதமர் மற்றும் ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சமாதான தூதுக்குழு ஒன்று கனடாவில் இருந்து விரைவில் ஸ்ரீலங்கா பயணமாகவுள்ளதாக செதிகள் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தூதுக்குழுவில் அடங்குவார்கள் என கனடாவின் அரசியல் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது. இலங்கைத் தீவில் தொடரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து குழுவினர் இருதரப்பினரையும் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கைத்தீவின் நிரந்தர சமாதானத்திற்கு கனடாவினால் போதுமான பங்களிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இந்த விடயத்தில் கனடா ஒரு பங்காளியாக இருக்க வேண்டியது அவசியம் என்ற கருத்து ஆண்டாண்டு காலமாக முன்வைக்கப்படுகின்றது. கனடா இனப்பிரச்சினைத் தீர்வில் ஒரு தலைமைத்துவ பங்கை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கைத்தீவுக்கு வெளியே அதிக இலங்கையர்களைக் கொண்ட நாடு கனடா. உள்நாட்டு யுத்தம் காரணமாக 250,000க்கும் அதிகமான இலங்கையர்கள் கனடாவின் பல்வேறு பாகங்களிலும் குடியேறியுள்ளனர். கனடாவிற்கும் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கும் நீண்ட தொடர்புகள் உள்ளன. இனப்பிரச்சினை விடயத்தில் பங்கேற்கும் அனைத்து உரிமையும் தேவையும் கனடிய அரசிற்கு உள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுக்களின்போது ஆலோசகராக கனடா பங்கேற்றது. இனப்பிரச்சினைக்கு கூட்டாட்சி தீர்வு குறித்தும் அதில் கனடிய முறையிலான கூட்டாட்சி தொடர்பாகவும் கனடிய தரப்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கனடா வருடமொன்றிற்கு ஸ்ரீலங்காவிற்கு 30 மில்லியன் டொலர்களை பல்வேறு வகையில் உதவித் தொகையாக வழங்கி வருகின்றது. இவ்வாறு கடந்த 50 வருட காலத்தில் பல பில்லியன் டொலர்களை கனடா ஸ்ரீலங்காவின் அபிவிருத்திப் பணிகளுக்காக வழங்கியுள்ளது. ஸ்ரீலங்காவில் சமாதானமற்ற நிலையில் அபிவிருத்திப் பணிகள் மூலம் முழுமையான பலன்களை அடைந்து விட முடியாது என்பது கனடிய தரப்பின் இன்றைய கவலையாகும். தொடரும் யுத்தத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அபிவிருத்திப் பணிகளும் பயனற்றுப் போவிடும் என்ற நிலையில் அபிவிருத்தியுடன் அரசியல் தீர்வின் தேவை குறித்தும் ஸ்ரீலங்கா பயணமாகவுள்ள கனடாவின் அமைதித் தூதுக் குழு கவனம் செலுத்தவுள்ளது.
இலங்கைத்தீவில் தொடரும் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளாவிய ரீதியில் தொடர்ந்தும் எழுப்பப்படுகின்றது. இதன் மூலம் பல ஆண்டுகளாக மௌனம் சாதித்துவந்த சர்வதேசத்தின் கவனமும் தற்போது ஸ்ரீலங்கா மீது திரும்பியுள்ளது. இலங்கைத்தீவில் தொடரும் அவல நிலை குறித்து சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கி வருகின்றன. இலங்கைத்தீவில் உடனடியாக யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாப்பரசர் 16ம் பெனடிக் முதல் மேற்குலக மற்றும் உலக வல்லாதிக்க நாடுகள் பலவும் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தப் பட்டியலில் கனடாவும் இடம்பிடித்துக் கொண்டுள்ளது.
இலங்கைத்தீவில் அதிகரிக்கும் மனித அவலங்கள் குறித்தும் கொல்லப்படும் பொதுமக்களின் தொகை குறித்தும் கனடிய அரசாங்கம் அண்மையில் கவலை வெளியிட்டிருந்தது. இருதரப்பினரும் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் Lawrence Cannon வலியுறுத்தியிருந்தார். பிரதான எதிர்க்கட்சிகளும் கனடாவில் இந்த விடயத்தில் அழுத்தங்களை வழங்க ஆரம்பித்துள்ளன. தொடர்ந்து செல்லும் யுத்தத்தினால் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களுக்காக மூன்று மில்லியன் கனடிய டொலர் பெறுமதியான உதவிகளை வழங்குவதற்கும் கனடிய அரசாங்கம் முன்வந்துள்ளது. கனடாவின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான அமைச்சர் ஆஞுதி Oஞீச் இந்த உதவித் தொகையை அறிவித்திருந்தார். அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் இந்த உதவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அண்மைக்காலமாக தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவு உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றது. தமிழ் மக்கள் மீதான தொடர் தாக்குதல்களைக் கண்டித்தும், தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரியும் உண்ணா நோன்புப் போராட்டங்கள், ஊர்வலங்கள், கவனஈர்ப்பு நிகழ்வுகள் மற்றும் சர்வமதப் பிரார்த்தனைகள் தொடர்கின்றன. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கனடிய தமிழர்களும் கடந்த மாதங்களில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தும் கவனஈர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கனடிய அரசாங்கம் இனப்பிரச்சினையில் மேலதிக பங்களிப்பை வகிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. குறிப்பாக தலைநகரான ஒட்டாவாவில் பாராளுமன்ற முன்றிலிலும், ரொறன்ரோவில் உள்ள ஸ்ரீலங்காவின் துணைத் தூதரகம் உட்பட்ட வெளிநாடுகளின் தூதரக முன்றிலிலும், முக்கிய ஊடகங்களின் தலைமையகங்களின் முன்பாகவும், வீதியோரங்களிலும் மொன்றியல், வன்கூவர் மற்றும் வின்னிபெக் நகரங்களிலும் இவ்வாறான போராட்டங்கள் தொடர்கின்றன.
கனடியப் பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இலங்கைத்தீவின் அவசர நிலை குறித்த சிறப்பு விவாதம் ஒன்று நடைபெற்றது.
புதிய ஜனநாயகக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட இந்த விவாதத்தில் இனப்பிரச்சினை தீர்வில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல் நிலை குறித்து அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது உரைகளின்போது எடுத்துரைத்தனர். இதேவேளை இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை உள்விவகாரம் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்து மீண்டும் கனடிய அரசியல் மட்டத்தில் எதிரொலித்துள்ளது. கனடிய நிழல் அரசாங்கத்தின் வெளிவிவகார விமர்சகர் Bob Rae இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். Toronto Star பத்திரிகைக்கு வரைந்துள்ள கட்டுரையொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழர்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைள் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வட அமெரிக்காவில் முன்வைக்கப்பட்டு வருகின்றது. "சர்வதேசப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'என்ற தொனியில் நசுக்கப்படும் தமிழர்களிள் நலனில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள Barak Obama அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச ரீதியில் தொடரும் தமிழர்களின் போராட்டம் ஏற்படுத்த ஆரம்பித்திருக்கும் மாற்றங்களின் அறிகுறிகள் இவை.
0 விமர்சனங்கள்:
Post a Comment