குரங்கு முகத்தை ஒத்த முகமூடியணிந்த சிலர் யால தேசிய வனத்தில் நடமாட்டம்
புத்தல கதிர்காமம் வீதியில் யால தேசிய வனத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
யால தேசிய வனத்தில் தேடுதல் நடத்தும் பணியில் ஈடுபட்ட ஊர்காவலர்கள் அங்கு குரங்கு முகத்தை ஒத்த முகமூடிகளை அணிந்த சிலர் நடமாடியதாகவும் இதனையடுத்து முகமூடியணிந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்களும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின் போது ஊர்காவலர்களுக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் முகமூடியினர் காட்டுக்குள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யால தேசிய வனத்திற்குள் ஒன்பது விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஊடுருவியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அவர்களைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் புத்தல பகுதியில் இரு ஊர்காவலர்கள் இனம்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் படையினரும் பொலிஸாரும் தேடுதல்களை நடத்திவருகின்றனர். ஊர்காவல் படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விடுதலைப்புலிகளே எனவும் பாதுகாப்பு தரப்பினர் முன்னர் தெரிவித்திருந்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment