செயற்கைக் கண்ணில் பொருத்தப்பட்ட வீடியோ புகைப்படக்கருவி மூலம் ஆவணப்படம் (படங்கள் + வீடியோ இணைக்கப்பட்டுள்ளன)
ஒற்றைக் கண்ணை மட்டுமே கொண்டுள்ள ஆவணப்பட இயக்குநர் ஒருவர், தனது செயற்கை கண்ணில் மறைவாக பொருத்தப்பட்ட நுண்ணிய வீடியோ கருவியொன்றின் மூலம் படம் எடுக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.
இந்தப் புகைப்படக் கருவியைப் பயன்படுத்தி மக்களின் இயல்பு நடவடிக்கைகளை அவர்கள் அறியாமல் இரகசியமாக படமெடுத்து ஆவணப்படமொன்றை தயாரிக்கும் முயற்சியில் கனடிய திரைப்பட இயக்குநரான ரொப் ஸ்பென்ஸ் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
சிறுவயதில் விபத்தொன்றில் ரொப் ஸ்பென்ஸின் வலது கண் சேதமடைந்தது.
அக்கண் மூன்று வருடங்களுக்கு முன் அகற்றப்பட்டு, அவ்விடத்தில் செயற்கைக் கண்பொருத்தப்பட்டது.
1970 களில் வெளியான "த சிக்ஸ் மில்லியன் டொலர் மான்' தொலைக்காட்சித் தொடரின் தீவிர ரசிகரான ஸ்பென்ஸ், அத்தொடரில் வரும் செயற்கை இயந்திர உறுப்புக்களைக் கொண்ட கதாபாத்திரத்தின் வீரதீர செயல்களால் கவரப்பட்டு அதையொத்த ஏதாவது முயற்சியை தனது செயற்கைக் கண்ணில் செய்ய முடியுமா என சிந்தித்துள்ளார்.
இந்நிலையில் செயற்கைக் கண்ணில் பொருத்தக்கூடிய வீடியோ படக்கருவியை உருவாக்கும் எண்ணம் அவர் மனதில் உதித்தது.
இந்நிலையில் மஸாசுஸெட்ஸ் கேம்பிரிட்ஜ் தொழில்நுட்ப நிறுவகத்தின் தொழில்நுட்ப பொறியியலாளர்களின் உதவியை அவர் நாடினார். அவர்களின் உதவியுடன் மேற்படி செயற்கைக் கண்ணில் பொருத்தக்கூடிய நுண்ணிய வீடியோ கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும் தான் இரகசியமாக வீடியோ படம் எடுப்பவர்களிடம் அது தொடர்பான அனுமதியைப் பெற்ற பின்னரே, அவர்கள் தோன்றும் காட்சிகளை தனது ஆவணப்படத்தில் உள்ளடக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வீடியோகாட்சி
0 விமர்சனங்கள்:
Post a Comment