மலேசியாவில் புலிகள் முகாம் அமைத்து வருவதாக தகவல்!
ஸ்ரீ லங்கா அரசு வன்னியில் மேற்கொண்டுவரும் யுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வன்னியில் புலிகள் இயக்கப்பயங்கரவாதிகளின் முகாம்கள் ,நிலையங்கள் மீது அரச விமானப்படையினரும் இராணுவத்தினரும் மேற்கொள்ளும் வான்வழி , தரைவழி, கடல்வழித்தாக்குதல்களின் போது ஏற்படக்கூடிய பொதுமக்கள் உயிரிழப்புகளைக்காரணம் காட்டி அங்கு புலிகளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஸ்ரீலங்கா அரசு தமிழினத்தவர்களையே கொல்லும் இனஒழிப்பு யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியும் யுத்தத்தை உடனே நிறுத்தி புலிகள் இயக்கத்துடன் சமாதானப்பேச்சுக்களை மேற்கொள்ளும்படியும் இனப்பிரச்சினைக்கு யுத்தத்தைதீர்வாக கைவிட்டு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்படி கோரி அண்மைக் காலங்களில் மலேசியாவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டு வந்துள்ளன.
அவ்வாறே ஸ்ரீ லங்கா அரசு பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்ட தீர்க்கமாக எடுத்துள்ள யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்துத் தீக்குளிப்பு சம்பவமும் நடைபெற்றது. இவ்வாறு மலேசியாவில் நிலவும் வன்னித்தமிழர்களுக்கு ஆதரவானதும் அனுதாபமானதுமான சூழ்நிலையைப் பயன்படுத்திப் புலிகள் இயக்கத்தினர் மலேசியாவிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர். கிழக்கு மாகாணம் ,மன்னார், வன்னிப் பிரதேசங்களிலிருந்து அரசபடையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தினரின் நடமாட்டங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் மலேசியா ஒரு வசதியான நாடாக மாறிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்களிலிருந்து தெரியவருகிறது. மேலும் அண்மையில் பிரபாகரன் மலேசியாவிற்குத் தப்பியோடிவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தது. அவ்வாறே வன்னியில் புலிகள் இயக்கம் ஒரு சிறு பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டு அரச படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் புலிகள் இயக்க உயர்மட்டத் தலைவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனும் உயர்மட்டத்தலைவர்களும் தப்பியோடி பதுங்கி வாழ்வதற்கு அங்கு நிலவும் தமிழர்களின் ஆதரவான நிலைப்பாடு மட்டுமன்றிப் பூகோள ரீதியான சாத்தியங்களும் உள்ளன. ஏனெனில் புலிகள் இயக்கதலைவர்கள் தப்பியோடக்கூடிய நாடுகளாகக் கருதப்படக்கூடிய இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து,பர்மா போன்ற இந்துசமுத்திரக் கடலோரப் பிராந்திய நாடுகளில் புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகளுக்கு பெரும் இடையூறான சூழல் இல்லாத நாடு மலேசியாவே.
இவற்றில் இந்தியாவுக்குப் புலிகள் இயக்கத் தலைவர்களோ ஏனைய உறுப்பினர்களோ தப்பியோடிச் சென்று அங்கு பாதுகாப்பாகப் பதுங்கியிருப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகும். அங்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் தமிழரும் புலிகளுக்கு ஆதரவாகப் பகிரங்கமாகச் செயற்பட்டு வந்தாலும் இந்திய மத்திய அரசின் உத்தரவின் பேரில் இந்திய இராணுவமும் தமிழ் நாடு பொலிஸ்துறையினரும் புலிகள் இயக்கத்தினரின் ஊடுருவல்களுக்கும் எதிராகக் கடும் கண்காணிப்புடன் இருந்துவருகின்றனர். அத்துடன் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் தமிழ் நாட்டு அரசியற் தலைவர்கள் பிரமுகர்களைக் கூட தமிழ்நாடு அரசு காவல்துறை கைது செய்தும் விசாரணை செய்தும் வருகிறது. எனவே அவர்கள் மீதே இந்தியப்பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கப்பட்டுள்ள நிலையில் புலிகள் இயக்கத்தலைவர்களும் உறுப்பினர்களும் இந்தியாவுக்குத் தப்பியோட முடியாத நிலை பாதுகாப்புக்கெடுபிடிநிலை உள்ளது. அடுத்து சிங்கப்பூர் சிறிய தேசப்பரப்பு என்பதாலும் அங்கும் போதைவஸ்து கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் மற்றும் கள்ளக்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் சட்டவிரோதமாக நுழைவோர் நடமாடுவோர் மற்றும் ஆட்கடத்தல் வர்த்தகர்களுக்கும் எதிராகக் கடுமையான பாதுகாப்பு கண்காணிப்புகள் நடைமுறையில் உள்ளதால் புலிகள் இயக்கத்தினர் சிங்கப்பூருக்குள் ஊடுருவுவதும் பாதுகாப்பானதாக இருக்கமாட்டாது .
அடுத்து பர்மா, தாய்லாந்து சற்று தூரமான நாடுகளாக இருப்பதால் நீண்ட தூரம் கடல்மார்க்கமாக களவாகப் பயணம் செய்வது ஒப்பீட்டளவில் கஷ்டமான காரியமாகும். எவ்வாறாயினும் தாய்லாந்தில் புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகள் முன்னரே இருந்து வருகின்றன. இந்தவகையில் மேற்படி நாடுகளைக்காட்டிலும் புலிகள் இயக்கத் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் தமிழர்களின் ஆதரவுள்ள மலேசியா வசதியான நாடாகும் .
அண்மைக்காலங்களில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் மலேசியாவில் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ லங்கா அரசபாதுகாப்புத்துறைக்கும், புலனாய்வுப் பிரிவினருக்கும் இதுபற்றிய பல தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்பு நிலைபற்றிய விசாரணைகளை அண்மைக்காலமாக பாதுகாப்புத்துறை செய்து வருகிறது. குறிப்பாக புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத்தலைவர்கள் தற்போது மலேசியாவுக்கே சென்றிருப்பதாகவும் அங்கு அவர்கள் ஒன்று கூடிச் செயற்பட்டு வருவதாகவும் இந்த அடிப்படையில் புலிகள் இயக்கச் செயற்பாடுகள் திட்டமிட்ட முறையில் அங்கு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவு��
�் ஸ்ரீலங்கா அரசுக்கு நம்பகரமான தகவல்கள் மலேசியாவிலிருந்தும் உள்ளூர் புலனாய்வு வட்டாரங்களிலிருந்தும் அண்மையில் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே இதுகாலவரையில் தாய்லாந்தில் செயற்பட்டுவந்த கே.பி.என்று அழைக்கப்படும் தர்மலிங்கம் ஷண்முகன் அல்லது குமாரன் பத்மநாதன் எனப்படும் புலிகள் இயக்கத் தலைவர் தற்போது மலேசியாவுக்கு வந்துள்ளதாகவும் அங்கு புலிகள் இயக்க முகாம் ஒன்றை கே.பி. அமைத்திருப்பதாகவும் நம்பகரமான பிந்திய தகவல்கள் ஸ்ரீ லங்கா பாதுகாப்புத்துறைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா கொழும்பிலிருந்து சென்ற பிரபல அரசியல்வாதி ஒருவர் மலேசியாவில் முகாம் அமைத்துச் செயற்படுவதாக நம்பப்படும் கே.பி. எனப்படும் மேற்படி புலிகள் இயக்கத்தின் பிரதான சர்வதேச பிரதிநிதியை இரகசியமாகச் சந்தித்துள்ளதாகவும் படுதோல்லியின் விளிம்பிலிருக்கும் பிரபாகரனையும் உயர்மட்டத்தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களையும் காப்பாற்ற வேண்டிய அவசர நிலைமைபற்றியும் அதற்காக மேற்கொள்ளக்கூடிய சர்வதேச உதவி நடவடிக்கைகள் பற்றியும் கே.பி.யும் குறித்த பிரபல அரசியல்வாதியும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குறித்த மலேசிய வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் இதுபற்றி குறித்த அரசியல்வாதி தெரிவித்த தகவல்களில் அவர் வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி நடவடிக்கைகள் பற்றியே மலேசிய அதிகாரிகளுடன் பேசியதாகக்கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட மலேசிய வட்டாரங்களிலிருந்து வெளியாகிவரும் தகவல்களுக்கேற்ப , புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான பல கப்பல்களை ஸ்ரீ லங்கா அரசபடையினர் தாக்கி அழித்துள்ள போதிலும் மலேசியாவில் செயற்படும் புலிகள் இயக்கக் குழுவினரிடம் மேலும் சில கப்பல்கள் உள்ளதாகவும் இறுதிக்கட்டத்திலிருக்கும் பிரபாகரனுக்கும் தலைவர்களுக்கும் இந்தக் கப்பல்கள் மூலமாக ஆயுதங்களையும் வேறு உதவிகளையும் வழங்க மேற்படி புலிகள் இயக்கத்தலைவர் கே.பி.யும். மற்றும் குழுவினரும் பாரிய திட்டங்களை வகுத்துள்ளதாகவும் இதற்கேற்ப ஏதோ வகையில் பிரபாகரனுக்கு உதவும் நடவடிக்கைகளை கே.பி.யும் குழுவினரும் மலேசியாவிலிருந்து விரைவில் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் எவ்வாறாயினும் ஸ்ரீ லங்கா கடற்படையினரும் விமானப்படையினரும் கடற்பிராந்திய கண்காணிப்பு நடவடிக்கைகளில் மிகவும் அவதானமாகவே செயற்பட்டுவருவதாகவும் அரசதரப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு மலேசியாவில் குறிப்பிட்டதொரு இரகசிய பிரதேசத்தில் முகாமை அமைத்துள்ள கே.பி.யும் புலிகள் இயக்கத்தினரும் தற்போது அரச பிரமுகர்களைக் கொலைசெய்வதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கே.பி.யும் புலிகள் இயக்கக் குழுவினரும் மலேசியாவில் செயற்படுவதுபற்றியும் புலிகள் இயக்கக் கப்பல்களின் நடமாட்டம் , முகாம் அமைப்பு, பயங்கரவாதத் தாக்குதல் திட்டங்கள் ஆகியன பற்றி மலேசியா அரசுக்கு ஸ்ரீ லங்கா பாதுகாப்புத்துறை தரப்பிலிருந்து தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆயினும் இதுபற்றி மலேசிய அரசு தரப்பில் அதிக கவனம் செலுத்தப்படாத நிலையே உள்ளது எனவும் சிரேஷ்ட அரச பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
தற்போது தப்பியோடிய புலிகள் இயக்கத்தலைவர்களும் கே.பி. எனப்படும் புலிகள் இயக்க சர்வதேசத்தலைவரும் மலேசியாவில் இணைந்து செயற்படுவதையும் , கே..பி. அமைத்துள்ளதாகக் நம்பப்படும் புலிகள் இயக்க முகாமையும் மலேசிய பாதுகாப்புத்துறையினர் கண்டுபிடித்து அழிக்காவிட்டால் ஸ்ரீ லங்கா அரசுக்கு மலேசியாவில் இயங்கும் புலிகள் பாரிய அச்சுறுத்தலாகவே இருப்பர் என மேற்படி உயர்மட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் மேலும் தெரிவித்துள்ளார்.
திவயின: செய்தியும் விமர்சனமும்






0 விமர்சனங்கள்:
Post a Comment