பிரித்தானிய இளவரசர் சாள்ஸின் வாழ்க்கையில் மூன்றாவது பெண்
பிரித்தானிய இளவரசர் சாள்ஸின் வாழ்க்கையில் இளவரசி டயானா மற் றும் கமிலா ஆகிய இரு பெண்களுக்கு மேலதிகமாக மூன்றாவது பெண் ஒருவரும் இடம்பிடித்திருந்தமை தொடர்பான தகவல்களை "த சண்" ஊடகம் நேற்று (09.03.2009) திங்கட்கிழமை வெளியிட்டிருந்தது.
1975 ஆம் ஆண்டு 26 வயது இளைஞராக இருந்த இளவரசர் சாள்ஸ் 30 வயதான ஜனட் ஜெட் கின்ஸ் (Janet Jetkins) என்ற பெண்ணைத் தீவிரமாக காதலித்துள்ளார்.
அச்சமயம் வேல்ஸை பிறப்பிடமாகக் கொண்ட ஜனட் ஜெட்கின்ஸ் கனடாவிலுள்ள பிரித்தானிய பிரதிநிதிகள் காரியாலயத்தில் வரவேற்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இளவரசர் சாள்ஸ் தனது ஆருயிர் காதலி ஜனட் ஜெட்கின்ஸிற்கு எழுதிய காதல் கடிதங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அக்கடிதங்களில் ஒன்றில் "உனது இருப்பிடத்தை மிகவும் அமைதியான இடமாக இருப்பதாக நான் கருதுகிறேன்.
நாங்கள் இணைந்து வெளியே சென்றால் அது பிரச்சினையாகிவிடும்" என சாள்ஸ் குறிப்பிட்டிருந்தார்.
திருமணத் தோல்விகள் தொடர்பில் இளவரசர் குறிப்பிடுகையில் ""அத்தகைய தவறுகள் பாரிய துன்பத்திற்கு காரணமாகின்றன"" என தெரிவித்துள்ளார்.
""வெளிநாட்டு விஜயங்களின் போது ஹோட்டல்களில் யுவதிகள் என்னுடன் தங்குவது குறித்து எனது தனிப்பட்ட செயலாளர் அச்சமடைந்துள்ளார். நான் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அனைவ ரையும் திருமணம் செய்வதன் முலம் அனைவருக்கும் சிறிது ஆறுதலளிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு பொதுநலவாய நாட்டிலிருந்தும் ஒரு பெண் வீதம் திருமணம் செய்வதே சிறந்த தீர்வாக இருக்கும் என நான் கருதுகிறேன்' என ஜனட் ஜெட்கின்ஸுக்கு எழுதிய பிறிதொரு கடிதத்தில் சாள்ஸ் வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார்.
இளவரசி டயானாவை மணப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் 1980 ஆம் ஆண்டு எழுதிய சில காதல் கடிதங்கள், கடந்த வாரம் "ஈ.பே' இணையத்தளத்தில் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.






0 விமர்சனங்கள்:
Post a Comment