புதுக்குடியிருப்பு பகுதிகளில் கடும் மோதல் புலிகளின் பாரிய மண்அணை படை வசம்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதிகளில் படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது
கரியமுல்லைவாய்க்கால் பகுதியில் புலிகளின் மண்ணனையொன்றைப் படையினர் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். புலிகளிடமுள்ள மிகச் சிறிய பகுதியையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் 53, 57, 58ஆம் படைப்பிரிவின் இரண்டாம் தாக்குதல் படையணியுடனான மோதலில் புலிகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இராணு வத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார். பின்னர் படையினர் நடத்திய தேடுதலின்போது புலிகளின் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் இதில் மூன்று சடலங்கள் பழுதடைந்திருந்ததாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேநேரம், பல ஆயுதங்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வன்னியில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து 381 பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
சாளைப் பகுதிக்கு ஆறுபேரும், புதுக்குடியிருப்புக்கு 340 பேரும், முல்லைத்தீவுக்கு 35 பேரும் வந்துசேர்ந்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
அவ்வாறு தப்பி வந்தபோது பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்ததாகவும், இரண்டு ஆண்கள் காயமடைந்திருப்பதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment