அரசின் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஐ.நாவிடம் புலிகள் கோரிக்கை : இலங்கை அரசு மறுப்பு
இலங்கையின் வடக்கே போர் முன்னரங்குகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையை விடுதலை புலிகள் கோரியுள்ளனர்.
எனினும் புலிகளின் கூற்றை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், அவர்களை விசாரணைக்குட்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
அதேவேளை , இரு தரப்பினரும் போர் குற்றங்களில் ஈடுபடுவதாகவும், அத்துடன் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடந்த வெள்ளிக்கிழமை கோரியிருந்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment