பாகிஸ்தானில் மீண்டும் இராணுவ ஆட்சி ஏற்படும் அறிகுறி..
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரிக்கு அந்நாட்டு இராணுவத்தளபதி அஷ்பக் பர்வேஷ் கியானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் ஜனாதிபதியாக சர்தாரி பொறுப்பேற்றதிலிருந்து சட்டமும் ஒழுங்கும் சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதை பறைசாற்றுவது போலவே லாகூரில் இலங்கை கிரிகெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராணுவத் தளபதி கியானி. பழங்குடியினர் பகுதியில் குறிப்பாக வடமேற்குப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மார்ச் 16 ஆம் திகதி நவாஷ் செரீப்பின் ஆதரவாளர்கள் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்;கு முன்னதாக நிலைமையை சரி செய்யுமாறும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின்னரே கியானி இவ்வாறு கூறியுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகின்றது என பலமுறை தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவைகள் கட்டுப்படுத்தப்படாது விட்டால் பாகிஸ்தானில் மீண்டும் இராணுவ ஆட்சிக்கு இது வழிவகுக்கும் என்றே மேற்கத்திய நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.






0 விமர்சனங்கள்:
Post a Comment