புதுமாத்தளன் வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக டாக்டர் ரி வரதராஜன் தெரிவிப்பு
முல்லைத்தீவில் இயங்கி வந்த ஒரேயொரு அரச மருத்துவ மனையான புதுமாத்தளன் வைத்ததியசாலையும் நேற்று சனிக்கிழமையுடன் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கான மருந்துகள் சேலைன் மற்றும் பன்டேஜ் உட்பட அவசிய பாவனைப் பொருட்கள் இல்லாத காரணத்தினாலேயே மூடப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி வரதராஜன் தெரிவித்துள்ளார்.
"வெளிநோயாளர் பிரிவு உட்பட சகல சேவைகளும் மூடப்பட்டுள்ளமை குறித்து சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் இதனை நேரில் அவதானித்துள்ளனர் "என்றும் அவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் இயங்கும் வைத்தியசாலைக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் பாதுகாப்பு தரப்பின் அனுமதிக்காக திருகோணமலை துறைமுகத்தில் தேங்கி கிடப்பதாக சுகாதார அமைச்சு தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment