புலம் பெயர் தமிழ் மக்கள் உடனடியாக செய்யவேண்டியது என்ன?
தற்போதைய நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விட்ப்பட்டிருக்கும் வன்முறை எமது மக்களின் பாரிய அழிவுகளிற்கு வழிகோலியுள்ளது. ஒவ்வொருநாளும் வன்னியில் இடம் பெறும் மனிதபடுகொலைகள் எம்மை விரக்தியின் விளிம்பிற்கே கொண்டு செல்கிறது.
இதை தடுத்து நிறுத்தக்கோரி எம்மால் மேற்கொள்ளப்பட்ட கவன்யீர்ப்பு போராடங்கள், ஊர்வலங்கள், மனுக்கள் இவைகளால் எந்தவிதமான பயனும் பெரிதாக எமக்கு கிட்டவில்லை. மாறாக சிறிலங்கா அரசின் வெறித்தனமான நடவடிக்கைகளை பெயரளவில் கண்டிப்பதாக அறிக்கை விடுவதோடு மேற்கத்தைய நாடுகளும், அமெரிக்காவும் நின்றுவிடுகின்றன. ஐநாவும் பெரிதாக எமக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை.
இத முறியடிக்க நாம் என்ன செய்யவேண்டும். இதுதான் எம்மனதில் தோன்றும் கேள்வி. இதற்கான பதிலையும் தருகின்றேன். ஆனால் எந்தவொரு தமிழரையும் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.
1. வேறு நாடுகள் நமக்கு உதவி செய்வார்கள் என்பது, பகல்கனவு மறந்துவிடுங்கள்.
2. விடுதலைப்புலிகளிற்க்கு நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவர்களாக வீரம் கொண்டு எழுந்து மீட்புபோரில் வெல்வார்கள் என்றும் நினைக்காதீர்கள். நிச்சயமாக வெல்வார்கள்... எப்படியென்றால் ....
ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் எமக்கு கிடைத்த தலைவரையும், போராளிகளையும், பொதுமக்களையும் மீட்க உணர்வுபூர்வமாக ஒன்றுபடவேண்டும். உதட்டளவில் கதைக்காமல் செயலளவில் எல்லைப்பாதுகாப்பு வீரர்களிற்கான கொடுப்பனவு உட்பட பல்வேறு செயற்திட்டங்களிற்கு நிதி தேவைப்படுகின்றது.
உடனடியாக புலம்பெயர் ஒவ்வொரு தமிழனும் 1000 முதல் 2000 Euro அல்லது U.S Dollar களை வழங்கினால் எமது போராட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது எனது கருத்து.
உயிரைக் கொடுத்து மண்ணை மீட்க போராளிகளும், எல்லைப்படை வீரர்களும் ரெடி. நீங்கள் ரெடியா?? ஒவ்வொருவனும் சிந்திப்பதற்கோ அல்லது கதைப்பதற்கோ நேரம் இதுவல்ல. இக்கடமையை நிறைவேற்றத்தவறின் எல்லாவற்றையும் இழந்து நாம் மீண்டும் சிறிலங்கா அரசின் வன்முறைகளின் வெற்றிக்கே வழிகோலுவோம்.
தாமதிகாதீர்கள் உடனடியாக நமக்கு கிடைத்திருக்கும் பொன்னான தலைவர்கள் காலத்தில் தமிழீழம் கிடைக்க தலைவரின் காலத்தில் தமிழீழம் கிடைக்க தலைவரின் கரத்தை வலுப்படுத்துவோம்.
நிச்சயமாக வெற்றி எம்கையில்.
நன்றி
சுவிஸிலிருந்து சிறி
(மின் அஞ்சலில் கிடைக்கப்பெற்றது)






0 விமர்சனங்கள்:
Post a Comment