இலங்கை விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நாளை விவாதம்
பொதுநலவாயத்திலிருந்து இடைநிறுத்தவும் கோரிக்கை
இலங்கை அரசாங்கம் உடனடி யுத்த நிறுத்தமொன்றுக்கு இணங்காவிட்டால் பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவத்திலிருந்து இலங்கையை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டுமென பிரிடிஷ் பாராளுமன்ற தொழில் கட்சி உறுப்பினர் ஜோன் ரயான் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வேண்டுகோளை ஏற்று இலங்கை அரசாங்கமும் 24 மணித்தியாலயத்துக்குள் யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு இணக்கம் தெரிவிக்காவிட்டால் இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்த வேண்டுமென பிரிடிஷ் பிரதமர் கோடன் பிரவுனை அவர் கேட்டுள்ளார்.
இதேவேளை, நாளை (24) பிரிடிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment