யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தும் திட்டமில்லை: ஜனாதிபதி
யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்தும் திட்டமெதுவும் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்துவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே நன்மையடைவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தரணிகளின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சட்ட வல்லுனர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எமது அரசாங்கமும், படைவீரர்களும் மனிதாபிமான சட்ட திட்டங்களக்கு மதிப்பளித்தே செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த முன்நகர்வுகளின் போது சிவிலியன்களுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாதென கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் கோரியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment