சிவிலியன்களின் பாதுகாப்புக்கு புலிகளாலேயே அச்சுறுத்தல்
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புலிகளுக்கு எதி ரான கிளர்ச்சியில் சிவிலிய ன்கள் ஈடுபட்டதாகச் செய் திகள் வெளிவருகின்றன.
அரசாங்கத்தி னால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருக்கும் சிவிலியன்களே புலிகளுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட் டதாகவும் புலிகளின் பொலிஸ் நிலையத் தையும் சில வாகனங்களையும் சிவிலியன் கள் எரித்துவிட்டதாகவும் அச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
ஆயுதமோதல் நடைபெறும் பிரதேசத்தி லிருந்து சிவிலியன்களை வெளியேற விடாது புலிகள் தடுத்து வைத்திருப்பதும் சிறுவர்க ளையும் இளைஞர்களையும் யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்காகப் பலவந்தமாகக் கடத்திச் செல்வதும் இக் கிளர்ச்சிக்குப் பிரதான காரணங்களாக உள்ளன.
ஆயுத நடவடிக்கையின் போது பொதுமக் கள் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது என் பதற்காக அரசாங்கம் புதுமாத்தளனில் பாது காப்பு வலயமொன்றைப் பிரகடனப்படுத் தியது. பொதுமக்கள் அவ்வலயத்தில் வந்து தங்கியிருக்கின்றார்கள். புலிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை உண்டென்றால் பாது காப்பு வலயத்துக்குள் அவர்கள் செல்லா திருக்க வேண்டும்.
ஆனால் புலிகள் மக்களோடு மக்களாக அங்கு சென்று பங்கர் அமைத்திருப்பது மாத்திரமன்றி அங் கிருந்து படையினர் மீது தாக்குதலையும் நடத்துகின்றனர். இவ்வாறான செயற்பாடு மக்களின் பாதுகாப்புக்கு முரணானது என் பது அவர்களுக்குத் தெரியாததல்ல. சிவிலி யன் இழப்புகளைக் காட்டிச் சர்வதேச மட்டத்தில் பிரசாரம் செய்வதற்காக இப் படிச் செய்கின்றார்களா என்ற சந்தேகம் பலரிடம் எழுகின்றது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சில தினங்களுக்கு முன் ஊடகவியலாளர் மகா நாட்டில் கூறியது போல புலிகள் இன்று மரணக் களத்தில் நிற்கின்றார்கள். அவர்கள் முழுமையாகத் தோற்று மரணத்தைத் தழுவு வது உறுதியாகிவிட்டது. மனிதக் கேடய ங்களாகப் பொதுமக்களை வைத்திருப்பதன் மூலமும் ஆட்களைப் பலவந்தமாக ஆயுத நடவடிக்கையில் ஈடுபடுத்துவதன் மூலமும் தோல்வியைத் தள்ளிப் போடலாமேயொ ழியத் தவிர்க்க முடியாது. இவர்கள் மக் களை வெளியேற விடாது தடுத்து வைத் திருப்பதும் ஆட்களைப் பலவந்தமாக யுத் தத்தில் ஈடுபடுத்துவதும் சொந்த நலனுக் காகச் சிவிலியன்களைப் பலி கொடுக்கும் செயல்.
புலிகள் தங்கள் பிள்ளைகளைக் கடத்திச் செல்வதற்கு எதிராகச் சிவிலியன்கள் செய்த முறைப்பாட்டையடுத்து உருவாகிய கொதி நிலை கிளர்ச்சியாக உருவெடுத்தது. மக்கள் எல்லாக் கொடுமைகளையும் எப்போதும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என் பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
இக் கிளர்ச்சியைத் தொடர்ந்து 1565 பேர் காட்டு வழியாகவும் கடலேரி வழியாக வும் தப்பி வந்திருக்கின்றனர். இவர்களில் 643 பேர் 35 படகுகளில் தப்பிவந்த போது நான்கு படகுகளில் புலிகள் அவர்களைத் துரத்திவந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றா ர்கள். கடற்படையினர் திருப்பித் தாக்கிச் சிவிலியன்களைப் பாதுகாப்பாக கொண்டு வந்தனர்.
வன்னியில் யுத்தப் பிரதேசத்தில் வாழும் சிவிலியன்கள் பற்றியும் அவர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்படுவதாகவும் இலங்கையிலும் சென்னையிலும் பேசும் தலைவர்கள் உண்மை நிலையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
சிவிலியன்கள் சுதந்தி ரமாக வெளியேறிச் செல்வதற்கு இடமளி க்காது தடுத்து வைத்திருப்பவர்களும் சிவி லியன்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்பவர்களும் சிவிலியன்களின் பிள்ளை களையும் உறவினர்களையும் பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்துபவர்களும் புலிகளே.
புலிகளாலேயே சிவிலியன்கள் துன்பத்து க்கும் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர். பாது காப்பான இடங்களை நோக்கிச் சிவிலிய ன்கள் வெளியேறுவதற்குப் புலிகள் இடம ளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதுதான் சிவிலியன்கள் மீது ள்ள அக்கறையின் வெளிப்பாடாக அமை யும்.
Thinakaran






0 விமர்சனங்கள்:
Post a Comment