விடுவிக்கப்பட்டிருந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை யாழ் அரசாங்க அதிபர் தகவல்
ஆயிரத்து 258 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 686 பேர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருப்பதாக யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதிதாக விடுவிக்கப்பட்டிருந்த பகுதிகளிலிருந்து ஆயிரத்து 258 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 686 பேர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருப்பதாக யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.
இவர்கள், கோப்பாய், மிருசுவில், கொடிகாமம், கைதடி, திருநகர், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலிருக்கும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சமைத்த உணவினை மாவட்ட செயலகமும், பிரதேச செயலகமும் வழங்கிவருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், இடம்பெயர்ந்து வந்திருக்கும் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அரசாங்க ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் தமது பணிகளை தொடர்வதற்கும் ஒழுங்கு செய்துகொடுக்கப்பட்டிருப்பதாகவும் கே.கணேஷ் தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment