வெடிகுண்டு நிபுணர் பரமானந்தன் மாஸ்ரர் உட்பட லாவுகல ஹோங்காகல பிரதேசத்தில் 13 புலிகள் பலி.
யால மற்றும் புத்தள பிரதேசக் காடுகளில் மறைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினா,; இன்று (03) காலையில் அம்பாறை, பாணமைப் பிரதேசத்தில் புலி உறுப்பினர்கள் 13 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இன்று காலையில் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலின் போது விசேட அதிரடிப் படையினருக்கு எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லையென உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்களில் வெடிகுண்டு நிபுணரான ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த அ 0012 என்ற இலக்கத்தைக் கொண்ட பரந்தாமன் மாஸ்டர் என அழைக்கப்படும் கந்தையா சரவணநாதன் அடங்குகிறார். அதிரடிப் படையினரின் தாக்குதலில் இரு பெண் புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு நிபுணரான பரந்தாமன் மாஸ்டர் அம்பாறை, மல்வத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் இவர் 1995 ஆம் ஆண்டுகளில் புலிகள் அமைப்பில் சேர்ந்து கொண்டவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.






0 விமர்சனங்கள்:
Post a Comment