புதுக்குடியிருப்பு பிரதேசம் படையினரின் பூரண கட்டுப்பாட்டில்: புலிகளின் 250 சடலங்கள் மீட்பு
புதுக்குடியிருப்புப் பிரதேசம் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இன்று (05) கொண்டு வரப்படடுள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்தது.
பாதுகாப்பு வலயம் தவிர்;ந்த மீதமாகவிருந்த ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பே இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவித்துள்ள பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம், நேற்று (04) முதல் இந்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலின் படையினர் நடத்திய தேடுதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் 250 சடலங்களை இன்று மீட்டதாகவும் தெரிவித்தது.
இராணுவத்தின் 53 ஆவது 58 ஆவது படைப்பிரிவுகளும் எட்டாவது படையணிப் பிhவுமே இந்தப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.






0 விமர்சனங்கள்:
Post a Comment