புலிகளின் 72 சடலங்கள் ஆயுதங்கள் நேற்று மீட்பு
முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள புதுக்குடியிருப்பில் தேடுதல் நடத்திவரும் படையினர் நேற்று (06) புலிகளின் 72 சடலங்களை மீட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இத் தேடுதலின்போது பெரும் எண்ணிக்கையான புதிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப் பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் நேற்று வரையில் 525 புலிகளின் சடலங்கள் படையினரால் மீட்கப்பட்டு ள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தை புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையின்போது படையினர் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட புலிகளது சடலங்களின் ஒரு தொகுதி சடலங்களே நேற்று மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இரண்டு எல்.எம்.ஜி. கள், 69 கிளேமோர் குண்டுகள், ஒரு எம்.பி.எம்.ஜி, 9 பெட்டிகளில் எம்.பி.எம்.ஜி ரவைகள், 20 ரி-56 ரக துப்பாக்கிகள், (19 பெட்டிகளில்) 12.7 ரவைகள் ஆகியனவே மீட்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் புதிதாக பயன்படுத்தப்படாத நிலையிலிருந்ததாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment