இன்று ஏ-9 வீதியூடாக யாழ். குடாவுக்கு உணவுப் பொருட்கள்
சித்திரைப் புத்தாண்டையொட்டி ஏ-9 வீதியூடாக முதல் தடவையாக தனியார் வர்த்தக நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் அடங்கிய 20 லொறிகள் இன்று யாழ். குடாநாட்டுக்குப் புறப்படவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரத்ண தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,
சித்திரைப் புதுவருடத்துக்கு முன்னர் யாழ். குடாநாட்டு மக்களுக்கு அத்தியவசிய பொருட்கள் உட்பட ஏனைய சகல பொருட்களும் கிடைப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்திருந்தார். இதற்கமைய தனியார் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன் அடிப்படையில் 13 தனியார் கம்பனிகளின் உற்பத்திப் பொருட்கள் அடங்கிய 20 லொறிகள் இன்று காலை யாழ். நகர் நோக்கிப் புறப்படுகின்றன. இந்த லொறிகள் வவுனியா சென்று ஏ-9 வீதி ஊடாக யாழ். நகரிலுள்ள நாவற்குழி களஞ்சிய சாலையைச் சென்றடையும்.
தமது பொருட்களை இறக்கியதன் பின்னர் குடாநாட்டிலிருந்து புறப்படும் 20 லொறிகளும் யாழ். உற்பத்திப் பொருட்களுடனேயே கொழும்பை வந்தடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment