மக்கள் பாவனைக்காக ஏ-9 வீதி விரைவில் திறக்கப்படுகிறது?
கண்டிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ஏ-9 வீதியை விரைவில் மக்கள் பாவனைக்குத் திறந்துவிடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.
யாழ் குடாநாட்டுக்கான அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக ஏற்கனவே ஏ-9 வீதி திறக்கப்பட்டிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண கூறினார்.
ஏ-9 வீதி மக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட முன்னர் பல்வேறு விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கண்ணிவெடிகள் அகற்றும் விடயத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
இதற்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். விடுதலைப் புலிகளால் சேதமாக்கப்பட்ட ஏ-9 வீதியைப் புனரமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், போர்நிறுத்த காலப்பகுதியில் ஏ-9 வீதி திறக்கப்பட்டிருந்தபோதும் தமிழ் மக்கள் அதனால் பூரண பலன் பெறவில்லையெனத் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment